Tamilnadu
137 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் பாசனத்திற்காக நீர் திறந்து விட சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் T.M.செல்வகணபதி அவர்களிடமும், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் அவர்களிடமும், விவசாய சங்கங்களை சார்ந்தவர்களும், விவசாய பெருமக்களும் நேரில் வந்து கேட்டுக் கொண்டதற்கிணங்க,தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு சென்று அதனை பரிசீலித்தப் பின் மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் பாசனத்திற்கு 30.07.2024 முதல் நீர் திறந்து விட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்கள் மூலம் முறையே 27000 ஏக்கரும், 18000 ஏக்கரும் ஆக மொத்தம் 45000 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றது. இவற்றில் சேலம் மாவட்டத்தில் 16443 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 17230 ஏக்கரும், நாமக்கல் மாவட்டத்தில் 11327 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் பாசனத்திற்காக நீர் திறந்து விட விவசாய சங்கங்களை சார்ந்தவர்களும், விவசாய பெருமக்களும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரை கேட்டுக் கொண்டுள்ளதாலும் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடிக்கு மேல் உள்ளதாலும், 2024-2025-ஆம் பாசன ஆண்டில் சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள பாசன நிலங்களுக்கு, மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் 30.07.2024 முதல் 13.12.2024 வரை 137 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும்.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!