Tamilnadu

”நமது வீரர்களின் சாதனை தொடர என்றும் கழக அரசு துணை நிற்கும்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சர்வதேச - தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அகில இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 589 வீர்களுக்கு ஊக்கத தொகை வழங்கும் நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 589 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.14 கோடி அளவுக்கு ஊக்கத் தொகையை வழங்கினார்.

பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,”சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஊக்கத் தொகை அளிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாடு அரசு எப்போதும் விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தி வருகிறது.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளையாட்டு வீரார்களாகிய நீங்கள் விளங்குகின்றீர்கள். பஞ்சாப் அடுத்தபடியாக அதிக விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டில் இருந்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு சென்று இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

கடந்த ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கியில் ஏற்பட்ட பழுது காரணமாக பதக்கத்தை தவறவிட்ட மனு பாக்கர். இந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்றுள்ளார். எத்தகைய தடை வந்தாலும் இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு மனு பாக்கர்.

அவரை போல நீங்களும் முன்னேற வேண்டும். சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்க கூடாது என்பதற்காக தொடங்கப்பட்டது தான் சாம்பியன்ஸ் அறக்கட்டளை.விளையாட்டு வீரர்களுக்கு அரசு பனியில் 3% இடஒதுக்கீடு கூடிய விரைவில் 50 வீரர்களுக்கான முதலமைச்சர் பணி நியமன ஆணை வழங்க இருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

Also Read: 137 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!