Tamilnadu

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஐக்கிய அமீரக அமைச்சர் சந்திப்பு : தொழில் முதலீடுகள் குறித்து ஆலோசனை !

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஐக்கிய அமீரகத்தின் வர்த்தகத் துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல்மரி இன்று சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து முதலமைச்சருடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

இச்சந்திப்பின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வளர்ச்சித் துறை ஆணையர் மற்றும் முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் அருண் ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் வே.விஷ்ணு, ஐக்கிய அமீரக தூதரகத்தின் உயர் அலுவலர்கள், பன்னாட்டு தொழில் குழுமத்தின் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

பின்னர் இந்த சந்திப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”ஐக்கிய அமீரகத்தின் வர்த்தக அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல்மரியை இன்று சந்தித்தது மகிழ்ச்சி. அவர் தமிழ்நாட்டின் சிறந்த நண்பர் மற்றும் நலம் விரும்பி ஆவார். 2022 இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நான் சென்றபோது அவரை சந்தித்து மகிழ்ச்சி அடைந்தேன். எங்கள் சந்திப்பின் போது, தொழில் முதலீடு மற்றும் வேலை உருவாக்கம் குறித்து விவாதித்தோம்” என தெரிவித்துள்ளார்.

Also Read: சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதில் சிறப்பாக செயல்படும் திராவிட மாடல் ஆட்சி : தமிழ்நாடு அரசு அறிக்கை!