Tamilnadu

சென்னையில் மினி பேருந்துகள் ? - போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் சொன்ன பதில் என்ன ?

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் புதுக்கோட்டை மண்டலம் சார்பில் 13 பி எஸ் 6 ரக புதிய பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்ததார், அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "புதுக்கோட்டை மாவட்டத்தில் பிஎஸ் 6 ரக 13 புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பணிக்காலத்தில் இறந்து போன வாரிசுதாரர்கள் 36 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு பெண் நடத்துனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து துறையில் நீண்ட காலம் தேக்கமாக இருந்த அனைத்து பணிகளும் தமிழ்நாடு முதலமைச்சர் சீரமைத்து வருகிறார்.

ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் பண பலன்கள் இல்லாமல் போனதை தமிழ்நாடு முதலமைச்சராக மு.க .ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு 1800 கோடி ரூபாய் நிதி வழங்கினார்கள். தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பண பலன்கள் வழங்காமல் இருக்கின்றது. விரைவில் முதலமைச்சர் இதற்கு நிதி வழங்குவார் பின்னர் அது வழங்கப்படும். பன்னிரண்டாவது ஊதியக்குழு பேச்சுவார்த்தையை மூன்றாண்டுக்குள் அதிமுக முடிக்காமல் போனதால் திமுக ஆட்சி அமைந்த உடன் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி அந்த பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டது.

அதிமுக ஆட்சி காலத்தில் சீர்குலைக்கப்பட்டிருந்த சம்பள விகிதம் மீண்டும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி வழியில் பேமெட்ரிக்ஸ் முறையில் வழங்கி ஊதிய உயர்வை வழங்கியுள்ளோம். தற்போது தான் பேச்சுவார்த்தை முடிந்து ஒரு ஆண்டு காலம் ஆகிறது. விரைவில் அடுத்த பேச்சு வார்த்தை தொடங்க நடவடிக்கை எடுத்து அதற்கான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பேச்சு வார்த்தை தொடங்குவோம்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு 685 பேர் பணிக்கு எடுக்கப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதற்கு முன்பாக வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் தொடங்கி முடிவடைகிற வரை இடைக்காலத்தில் பேருந்துகள் நின்று விடாமல் இருக்க அவுட்சோர்சிங் முறையில் ஓட்டுனர் நடத்துனர்களை எடுத்தோம். அதிக ஓட்டுனர்கள் நடத்துனர்கள் ஓய்வு பெறுகிறார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் 58 வயதை 60 ஆக்கிய காரணத்தினால் தொடர்ந்து ஓய்வு பெறுகிறார்கள். அந்த இடத்தை நிரப்புவதற்கு இடைக்காலத்திற்கு அதான் அவுட்டோர்சிங் பயன்படுத்தப்படுகிறது. தற்போது 685 பேர் பணிக்கு புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்டு பணிக்கு வந்த பிறகு அவுட்சோசிங் முறையில் நியமிக்கப்பட்டவர்கள் விளக்கப்பட்டார்கள். செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் அந்த பணிக்கான ஆள் எடுக்கும் நடவடிக்கை நடைபெறும். அதுவரை இந்த அவுட்சோர்சிங் முறை பயன்படுத்தப்படும்.

பல மாநிலங்களில் பென்சனே கிடையாது. தமிழ்நாட்டில் தான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி டென்சன் கொடுத்தார். மாநிலங்களில் தான் டி ஏவே இருக்கிறது. அதையும் தற்போது நிறுத்திவிட்டார்கள். தற்போது தற்காலிக பணியாளர்களைத்தான் மற்ற மாநிலங்களில் எடுத்து வருகிறார்கள். நிரந்தரப் பணியாளர்களை இல்லை. தமிழ்நாட்டில் தான் நிரந்தர பணியாளர்கள் இருக்கின்றனர்.

பென்ஷன் கொடுத்தவரும் கலைஞர் கருணாநிதி தான் டிஏ கொடுத்தவரும் கலைஞர் கருணாநிதி தான். பென்ஷன் டி ஏ வை நிறுத்தியவர்கள் அதிமுக எடப்பாடி ஆட்சி. அவர்களே நிறுத்தி விட்டுப் போனதை தற்போது அவர்களே கொடுக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். இடைப்பட்ட காலத்திற்கு மொத்தமாக கொடுக்க வேண்டுமா இல்லையா என்பதை நீதிமன்றத்திற்கு சென்ற காரணத்தினால் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. பென்ஷன் டிஏ வழங்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க கூறியுள்ளார்.

சென்னையில் மினி பேருந்துகள் தொடங்குவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் உள்துறை செயலாளர் தலைமை நடைபெற்றது. பல்வேறு சங்கத்தினர் அதில் கலந்து கொண்டனர். இந்த நடவடிக்கையை திராவிட மாடல் முதல்வர் ஆரம்பித்து சட்டமன்றத்திலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கேட்ப அடிப்படையில் சில மாற்றங்கள் செய்து முதலமைச்சரின் ஒப்புதல் பெறப்பெற்று புதிய கொள்கை அறிவிக்கப்பட்டு புதிய வழித்தடங்களும் வரும். அதேபோல் மினி பேருந்துகள் ஓட்டுகின்ற ஓட்டுநர்களின் கோரிக்கையும் ஏற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சியில் ஏற்கனவே எட்டு கோட்டங்கள் உள்ளது அதில் நிர்வாக சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால் நம்மைப் பொறுத்தவரை மக்களுக்கு செய்யக்கூடிய சேவைத்துறை என்பதால் இருப்பவற்ற எதையும் கலைக்க கூடாது என்ற எண்ணத்தில் உள்ளோம். திருச்சி என்றாலும் கும்பகோணம் என்றாலும் ஒன்றுதான். அதற்கான அலுவலகங்கள் அனைத்தும் செயல்பட்டு வருகிறது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை. திருச்சிக்கு என்ன தேவை இருக்கிறதோ அந்த தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

100 எலக்ட்ரிக் பேருந்துகள் வாங்குவதற்கு டெண்டர் நடைமுறையில் உள்ளது. விரைவில் டெண்டர் முடிந்த 100 பேருந்துகள் வந்த பிறகு மீதி 400 பேருந்துகள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மொத்தம் 500 எலக்ட்ரிக் பேருந்துகள் வாங்கப்பட உள்ளது. போக்குவரத்துக்கு கழகத்தில் 20000 பேருந்துகள் இருக்கிறது. இதில் வாரம் ஒரு நாள் ஏதோ ஒரு இடத்தில் ஒரு பேருந்தில் டயர் கலந்தது பஞ்சர் ஆனது என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் வருகிறது அதை பதிவு செய்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை நாம் சொந்த வாகனம் வைத்திருந்தாலும் நாம் போகும்போது திடீரென்று வாகனபொழுது ஏற்படுவது தடுக்க முடியாத ஒன்றுதான். வாகனம் என்பது ஒரு இயந்திரம். அதனால் 20000 பேருந்துகள் இருக்கக்கூடிய இடத்தில் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது. அதைத் துறை சார்ந்த அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து நாங்கள் அறிவுரை வழங்கி வருகிறோம். பிரச்சனைகள் ஏற்படாதவாறு பேருந்துகள் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று கூறினார்.

Also Read: ஆங்கிலத்தில் பேசக் கூறிய ஆசிரியர்... பள்ளியை மூட வேண்டும் என போராடிய ABVP அமைப்பு - ம.பி.யில் அதிர்ச்சி !