Tamilnadu
தமிழ்நாட்டில் முதல் முறை... கட்டட அனுமதியை ஆன்லைனில் உடனடியாக வழங்கும் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாட்டில் முதல் முறையாக கட்டிட அனுமதியை ஆன்லைனில் உடனடியாக வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் பல லட்சம் பல லட்சம் பயனாளிகள் பயனடைவார்கள் என வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "தமிழ்நாட்டில் முதல் முறையாக கட்டிட அனுமதியை ஆன்லைனில் உடனடியாக வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் படி, www.onlineppa.tn.gov.in <http://www.onlineppa.tn.gov.in/> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர் அளிக்கும் விவரத்தின் அடிப்படையில் உடனடியாக கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட எந்த அலுவலகத்துக்கும் செல்ல வேண்டிய நிலையில் இருந்து நேரத்தை சேமிக்க முடியும்.
கட்டிட அனுமதி கொடுப்பதில் இருந்த பல சிக்கல்களை தீர்த்துள்ளோம். அனுமதிக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு உடனுக்குடன் அனுமதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். கட்டிடம் கட்ட விண்ணப்பிக்கும் பயனாளிகள் காத்திருக்காமல் பணியை தொடங்கலாம். இத்திட்டம் மூலம் லட்சக்கணக்கானோர் பயனடைவார்கள்.
வீட்டு வசதித்துறை குடியிருப்புகளை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. விற்பனையாகாத வீடுகளை வாடகை விடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
கடந்த பட்ஜெட்டின்போது 2,500 சதுர அடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு, கட்டிட அனுமதி தேவையில்லை என்றும் பணி முடிவு சான்று பெற தேவையில்லை என்ற அறிவிப்பும் வெளியானது. கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக தமிழகத்தில் முதல் முறையாக கட்டிட அனுமதியை ஆன்லைனில் உடனடியாக வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!