Tamilnadu

நாளை முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை 55 புறநகர் ரயில்கள் ரத்து... இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் நேரம் என்ன?

தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை சென்னை கடற்கரை செங்கல்பட்டு சென்னை கடற்கரை தாம்பரம் மார்க்கத்தில் 55 மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

தற்போது எந்தெந்த ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளது என்பது விவரங்களையும், ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பதிலாக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குறித்த விவரங்களையும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் :

ரத்து செய்யப்பட்ட ரயில்கள் :

சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.30 மணி, 9:40, 9.48, 9.56, 10.04, 10.12, 10.24, 10.30, 10.36, 10.46, 10.56, 11.06, 11.14, 11.22, 11.30, 11.40, 11.50, 12.00, 12.10, 12.20, 12.30, 12.40, 12.50 ஆகிய நேரங்களில் கிளம்பும் 23 மின்சார ரயில்கள் காலையில் ரத்து செய்யப்படுகிறது.

இரவு 7.15, 7.19, 8.15, 8.45, 8.55, 9.40, 10.40, 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது .

சிறப்பு ரயில்கள் விவரம் :

ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பதிலாக சிறப்பு ரயில்களாக காலை 9.30 , 9.50, 10.10, 10.30, 10.50, 11.10, 11.30, 11.50, 12.10, 12.30, 12.50 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரை நாளை முதல் ஆகஸ்ட்14ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இரவு 10.40,11.05,11.30,11.59 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

காலை 10.20,10.40,11.00,11.20,11.40,12.00,12.20,12.40,1.00,1.20,1.40 ஆகிய நேரங்களில் பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

காலை 10:45, 11:10, நண்பகல் 12:00, 12:50, மதியம் 01:35, 01:55 மற்றும் இரவு 11:55 மணி ஆகிய நேரங்களில் கூடுவாஞ்சேரி இருந்து செங்கல்பட்டு வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

காலை 10:00, 10:30, 11:00, 11:45, நண்பகல் 12:30, மதியம் 01:00 மற்றும் இரவு 11:00 மணி ஆகிய நேரங்களில் செங்கல்பட்டில் இருந்து கூடுவாஞ்சேரி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

Also Read: "இனி அரசு அதிகாரிகள் டவுசர் அணிந்து அலுவலகங்களுக்கு வரலாம்"- பாஜக அரசின் உத்தரவை விமர்சித்த காங்கிரஸ் !