Tamilnadu
“பெரியார் படத்தை இப்போது விட்டாலும் பரபரப்பாகும்” - PERIYAR VISION OTT தளம் விழாவில் நடிகர் சத்யராஜ்!
சென்னை வெப்பெரியில் உள்ள பெரியார் திடலில் 'பெரியார் விஷன்' என்ற OTT தளம் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கழக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, நடிகர் சத்யராஜ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, PERIYAR VISION OTT தளத்தை தொடங்கி வைத்து அறிமுகப்படுத்தினர்.
PERIYAR VISION OTT-ல் பகுத்தறிவு உரையாடல்கள், நேர்காணல்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள், வலைத்தொடர்கள், வகுப்புகள் ஆகியன இடம்பெறும். ஒலி - ஒளிப் புத்தகங்கள், இசை ஆக்கங்கள் என பல வடிவங்களிலும் பகுத்தறிவு, சமூகநீதி, பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு, அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றை முன்னிறுத்திய படைப்புகள் இடம்பெற்றுள்ளது.
பெரியார் திரைப்படத்தைத் தயாரித்த லிபர்ட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் "Periyar Vision" OTT-யை உருவாக்கி வெளியிடுகிறது. இது ஆண்டிராய்டு டிவிகளிலும், ஆப்பிள் மற்றும் ஆண்டிராய்டு செல்பேசிகளிலும் பார்க்கத்தக்க வகையில் உள்ளது. தொடக்க விழா சலுகையாக 2 மாத கட்டணம் ரூ.49, 6 மாத கட்டணம் ரூ.147, இரண்டு ஆண்டு கட்டணம் ரூ.588 ஆகும்.
இந்த புதிய ஓடிடி தளத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வீடியோ பதிவு வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து மேடையில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது, "உலகம் முழுவதும் கார்பரேட் சாமியார்கள் stress, depression என்பதை வைத்துதான் காசு பார்க்கிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதி பற்றிதான் ஆர்வம் இருந்தது. ஆனால் வட மாநிலத்தவர்கள் கனிமொழி வெற்றி பெறக் கூடாது என்றுதான் கவனித்தார்கள். இவர் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றால் ஆட்டி வைக்கிறார் என்றும், அவர் வெற்றி பெறுவது பொய்யாக இருக்கக் கூடாதா என்றும் தான் நினைத்திருப்பார்கள்.
கலைஞர் காலத்தில் இருந்தே திரைப்பட தணிக்கை மீது விமர்சனங்கள் இருந்து வந்துள்ளது. குறிப்பாக பராசக்தி திரைப்படத்தில் வெட்டப்பட்ட வசனங்கள் அளவில்லாதவை. மேலும் உதயசூரியன் இனி பார்வையில் விழித்துக் கொண்ட பார்வையில் என்ற வரிகளை ’அன்பே வா’ படத்தில் புதிய சூரியன் என்று மாற்றப்பட்டது. இதில் எல்லாம் தான் திமுக வளர்ந்தது.
பெரியார் படத்தை டிஜிட்டலைஸ் செய்துள்ளார்கள் என்று சொன்னார்கள். இந்த சூழலிலாவது ’பெரியார்’ படத்தை வெளியிட வேண்டும். இப்போது விட்டாலும் பரபரப்பாகும் என்ற பயம் உள்ளது.
திரையரங்குகள் முன்பு யாராவது பிரச்சினை செய்யுங்கள். எங்களுக்கு எதிர்ப்பு இருந்தால்தான் நன்றாக இருக்கும். நாங்கள் எதிர்ப்பில்தான் வளருவோம். தலைவர் கலைஞரை விட தற்போதுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேகமானவர்” என்றார்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!