Tamilnadu
”என் மனதிற்கு மிகமிக நெருக்கமான பதவி இதுதான்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!
திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி தொடங்கப்பட்டு, 44 ஆண்டுகள் நிறைவடைந்து, 45-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி சென்னையில் 45-ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவில், மாவட்ட வாரியாக சமூக வலைதளப் பக்கங்களை தொடங்கி வைத்தார் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இன்று தி.மு.க இளைஞரணி 45 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நேரத்தில் நான் பொறுப்பில் இருக்க வாய்ப்பு அளித்த கழக தலைவருக்கு நன்றி.
தேர்தல் நேரத்தில் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு 7 முறை அல்ல ஆயிரம் முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அப்போதே சொன்னேன். எங்கள் தலைவரையும் சமூக நீதியையும் தான் ஏற்றுக்கொள்வார்கள். 40க்கு 40 வெற்றியை கொடுத்து இதை நிரூபித்து காட்டிய தமிழ்நாட்டு மக்களுக்கு இளைஞரணி சார்பில் நன்றிகள்.
கொள்கை இல்லாததால் பொய்களை மட்டும் பேசி, அதை பரப்பி பா.ஜ.க அரசியல் செய்கிறது.ஆனால் நம்முடைய இயக்கத்திற்குத்தான் மக்களை காக்கும் திராவிட இயக்க கொள்கை உள்ளது.
நம் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, நம் கழகத்திற்கு அவர்களின் ஆதரவை பெற்று தந்துள்ளது. அதையெல்லாம் உணர்ந்து, வரும் 2026-லும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி தான் என்பதை மனதில் நிறுத்தி இளைஞரணி தம்பிமார்கள் உழைக்க வேண்டும்.
இளைஞரணியின் 45வது ஆண்டில் நாம் எடுத்துக் கொள்ளும் ஒரே குறிக்கோள் 2026ஆம் ஆண்டிலும் திமுக கூட்டணி தான் வெல்ல வேண்டும்; நம் தலைவரின் ஆட்சிதான் அமைய வேண்டும் என்பதாகவே இருக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!