Tamilnadu
ரூ.100 கோடி நில மோசடி விவகாரம் : எம்.ஆர்.விஜயபாஸ்கரை தொடர்ந்து காவல் ஆய்வாளர் கைது !
கரூரில் பிரகாஷ் என்பவர் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புடைய 22 ஏக்கர் நிலத்தை தனது மகள் சோபனா என்பவருக்கு செட்டில்மெண்ட் செய்து கொடுத்திருந்தார். இந்த சூழலில் இந்த நிலத்தை முன்னாள் அமைச்சர்எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவர் சகோதரர் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்துவிட்டதாக பிரகாஷ் புகார் அளித்திருந்தார் .
அந்த புகாரின் அடிப்படையில் காவல் நிலையத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த ஜூன் மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஜாமீன் மனுவும் இரண்டு முறை நிராகரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து சுமார் 40 நாட்களாக தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கேரள மாநிலம் திருச்ச்சூரில் வைத்து நேற்று (ஜூலை 16) சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர் கரூருக்கு அழைத்து வரப்பட்ட விஜயபாஸ்கரிடம் சுமார் 6 மணி நேரமாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவரை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலலுக்கு அனுப்பி வைத்தனர்.
பிரகாஷ் தனக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை தனது மகள் சோபனாவின் பெயருக்கு செட்டில்மெண்ட் செய்து கொடுத்தாலும், அந்த பத்திரங்களை பிரகாஷ் மறைத்து வைத்திருந்தார். ஆனால், சோபனா பெயரில் இருந்து பத்திரங்கள் காணாமல் போய்விட்டதாக வில்லிவாக்கம் காவல்நிலயத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டு அதன் பெயரில் காணாமல் போன பத்திரங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் சான்றிதழ் அளித்திருந்த்தாக கூறப்படுகிறது.
அந்த சான்றிதழ் அடிப்படையில் ஷோபனாவிடம் பெயரில் இருந்து 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பினர் தங்களுக்கு வேண்டியவர்கள் பெயரில் பத்திர பதிவு செய்து கொண்டனர். இந்த சூழலில் வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் அளித்த சான்றிதழ் போலியானது என கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார் வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரிதிவிராஜை கைது செய்து அவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“‘நன்றி’ என்றால் என்னவென்றே தெரியாத பழனிசாமிக்கு இதெல்லாம் புரியாத - துணை முதலமைச்சர் உதயநிதி காட்டம்!
-
ஆராய்ச்சி மாணவர்கள் விவகாரம் : “Mentor மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” - உயர்கல்வித்துறை எச்சரிக்கை!
-
எரியும் மணிப்பூரை அணைக்க, ஒன்றிய பா.ஜ.க. அரசு துளியும் முயற்சிக்கவில்லை! : முரசொலி கண்டனம்!
-
மகனுக்காக அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்.. வேலைவாய்ப்பு என்று கூறி மாணவர்களை வரவழைத்த அர்ஜுன் சம்பத் -கண்டனம்
-
Carrom World Cup : “பெருமை கொள்கிறேன் மகளே...!” - தங்கம் வென்ற காசிமா குறித்து முதலமைச்சர் நெகிழ்ச்சி !