Tamilnadu

நாடகம் நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி : அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆதாரங்களுடன் கண்டனம்!

அ.தி.மு.க தொடர்ந்து பெற்று வரும் தொடர் தோல்விகளை மறைக்கேவே, மக்களை ஏமாற்றி நீலிகண்ணீர் வடிப்பதற்காக, நாளை 19-ஆம் தேதி தாம்பரத்தில் வெத்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது கேளிக்கூறியது என்றும், 3 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் தாம்பரம் மாநகராட்சியாக உயர்த்தப்பட்ட பிறகு, மாநகராட்சியில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி எண்ணில்லடங்கா மக்கள் நலப் பணிகள் நிறைவேற்றப்பட்டதை மார் தட்டி பெருமைப்படுகிறோம் என்றும், அதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி, எடப்பாடி நடத்துவது வெத்து போராட்டம் தான் என்று தா.மோ.அன்பரசன் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறக்கையில்,

“சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள மாநகர பகுதிகள் பெரும் வளர்ச்சி அடைந்ததைப் போல, சென்னை புறநகர் பகுதியில் உள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி அப்பகுதிகளையும் வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கில், சென்னை புறநகர் பகுதியில் முன்பு இருந்த தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம் ஆகிய 5 நகரராட்சிகளையும் பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை, மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம், திருநீர்மலை ஆகிய 5 பேரூராட்சிகளையும் ஒன்றிணைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், 2021 ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதி தாம்பரம் மாநகராட்சியாக உயர்த்தப்படும் என்ற நல்ல அறிவிப்பை வெளியிட்டார்.

சென்னை மாநகரத்திற்கு நுழைவு வாயிலாக இருக்கும் தாம்பரம் மாநகரட்சியில் கடந்த 3 ஆண்டு கால நல்லாட்சியில் மக்களுக்காக எண்ணற்ற பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மக்களிடமும் அவரது கட்சி தொண்டர்களிடமும் செல்வாக்கை இழந்துள்ள அ.தி.மு.க பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தாம்பரம் மாநகராட்சி, செம்பாக்கம் மண்டலம் -3 க்குட்பட்ட சிட்லபாக்கம், செம்பாக்கம் பகுதிகளில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவில்லை என்ற பொய்யான தகவல்களை கூறி, தாம்பரம் மாநகராட்சி, சிட்லப்பாக்கத்தில் நாளை 19-ஆம் தேதி ஒரு வெத்து போராட்டம் நடத்த போவதாக தம்பட்டம் அடித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுக்கடுக்கான பொய் மூட்டைகளை எடுத்து கூறி, மக்களை நம்ப வைக்க போராட்டம் என்ற பெயரில் நாடகம் நடத்துகிறார். மக்கள் யாரும் அவர் எடுத்து கூறும் பொய்யான குற்றச்சாட்டுக்கைளை நம்பமாட்டார்கள் என்பது நாட்டுக்கே தெரியும்.

மக்கள் மனம் மகிழ்ந்து போற்றி பாராட்டும் வகையில், திராவிட மாடல் நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான நல்லாட்சியில், தாம்பரம் மாநகராட்சியில் கடந்த 2021-ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் ஏராளம்!! ஏராளம்!!!. அதை பட்டியலிட பக்கங்கள் போதாது.

தாம்பரம் மாநகராட்சியில், 2 ஆண்டு கால ஈடில்லா ஆட்சியில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.55.81 கோடி மதிப்பீட்டில் 41,437 தெரு விளக்குகள் LED விளக்குகளாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

விளங்கா அ.தி.மு.க ஆட்சியில், தாம்பரம் மாநகராட்சி பகுதியில் 30 நாட்கள் இடைவெளியில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு மக்கள் தத்தளித்து வந்தனர்.

2018-ஆம் ஆண்டு, அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்டு நிலுவையில் இருந்த அனகாபுத்தூர் குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகள் கடந்த ஆண்டு முழுமையாக முடித்து தினசரி 35 லட்சம் குடிநீர் சென்னை பெருநகர குடிநீர் வாரியத்திடம் இருந்து பெறப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் -4 மற்றும் மண்டலம் -5 இல் பாலாற்று குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ. 4 கோடியில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு 50 லட்சம் லிட்டர் குடிநீர் தினசரி கூடுதலாக பெறப்படுகிறது. மூவரசம்பட்டு, திரிசூலம் பகுதி கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு 30 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது.

மக்கள் போற்றும் வகையில் மகத்தான ஆட்சியை நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் தாம்பரம் மாநகராட்சிக்கு தினசரி 8 MLT குடிநீர் வழக் ஆணையிட்டதின் காரணமாகவும்,

பாலாற்று குடிநீரோடு - மேலே குறிப்பிட்டுள்ள திட்டங்களின் கீழ் குடிநீரையும் கூடுதலாக தண்ணீர் பெறப்பட்டதன் காரனமாகவும், தாம்பரம் மாநகாட்சியில் உள்ள மக்களுக்கு தற்போது 3 நாட்களுக்கு ஒரு முறை சீரான குடிநீரை வழங்கி, தவித்து வந்த மக்களின் தாகத்தை தீர்த்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க அலங்கோல ஆட்சியில், தாம்பரம் மாநகராட்சியில் அடங்கிய 10 உள்ளாட்சி அமைப்புகளில் குப்பை சேகரிக்கும் பணிகள் மிகவும் மோசமான நிலையில் கையாளப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக 5 பேரூராட்சிகளிலும் மனிதர்கள் கையால் இயக்கும் சைக்கிள் குப்பை வண்டிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

தற்போது அவைகள் எல்லாம் நிறுத்தி விட்டு, தாம்பரம் மாநகாட்சியில் தற்போது உள்ள 70 வார்டுகளில் அடங்கிய 2,65,830 வீடுகளில் சேரும் குப்பைகள் 800 வீடுகளுக்கு ஒரு பேட்டரி வாகனங்கள் மூலம் தினசரி சேகரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகள்- மக்கா குப்பைகள் என தரம் பிரிக்கப்கப்பட்டு தற்போது தாம்பரம் மாநகரம் தூய்மையான மாநகரமாக பராமரிக்கப்பட்டு வருவதை மக்கள் நன்கு அறிவார்கள்.

தாம்பரம் மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்கு பாதள சாக்கடை திட்டத்தை செயலபடுத்திட ரூ. 2,010 கோடி மதிப்பீடில் புதிய திட்டம் தயாரிக்கப்படுள்ளது. இந்த திட்டப்பணிகளுக்கு அனுமதி பெறப்பட்டு விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது.

குறிப்பாக, எடப்பாடி பழனிச்சாமி வெத்துப் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ள, தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் 3 -வது மண்டலத்தில் அடங்கிய செம்பாக்கம், சிட்லபாக்கம் பகுதிகள் மட்டும் அ.தி.மு.க.வின் 10 ஆண்டு கால பாழாய்போன ஆட்சியில், அப்பகுதியில் உள்ள மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என்பதை அப்பகுதி மக்களே நன்கு அறிவார்கள்.

ஆனால் தற்போதைய திரவிட மால் நல்லாட்சியில், 3-வது மண்டலத்தில் நடைபெறும்பணிகளை பட்டியலிடுகிறேன். சிட்லபாக்கம் ஏரி மேம்பாட்டு பணிகள் ரூ. 25 கோடி மதிப்பீட்டில் நீர்வளத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டது. சிட்லபாக்கம் ஏரியில் ரூ. 32 லட்சம் மதிப்பீடில் சிறுவர்கள் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டு, சிறுவர்களும் குழந்தைகளும் கொஞ்சி விளையாடி வருகிறார்கள்.

சிட்லபாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் ரூ. 45 லட்சம் மதிப்பில் சேமிப்பு கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் வழங்குவதற்காக பாலாற்று குடிநீர் திட்டம் மூலம் 15 லட்சம் லிட்டர் குடிநீர் கூடுதலாக பெறப்பட்டு, கடந்த 5 மாதங்களாக இப்பகுதியில் உள்ள மக்களுக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் செம்பாக்கம் நகராட்சியாகவும், சிட்லபாக்கம் பேரூராட்சியாகவும் இருந்த காலத்தில் திடக்கழிவு மேம்பாட்டு திட்டம் சரிவர செயல்படாத காரணத்தால், சிட்லபாக்கம், செம்பாக்ம் ஏரிகளில் திடக்கழிவுகளை கொட்டி குடிநீர் ஆதாரத்தை பாழ்படுத்தினார்கள்.

இந்த பகுதி தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, சிட்லபாக்கம், செம்பாக்கம் பகுதியில் உள்ள 7 வார்டுகளிலும் நாள் ஒன்றுக்கு 42 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு குப்பை இல்லாத பகுதியக காட்சி அளிக்கிறது.

2 ஆண்டு கால ஈடு இணையற்ற ஆட்சியில், இந்த மண்டலத்தில் மட்டும் ரூ. 9.32 கோடி மதிப்பீட்டில் 23 கிலோ மீட்டர் நீளத்திற்கு தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க ஆட்சி காலத்தில், அப்பகுதி மக்களுக்காக எந்தவித நன்மைகளையும் செய்து தராமல் அப்பபகுதி மக்களை எல்லாம் தவிக்க விட்டதால்தானே, அப்பகுதி மக்கள் கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் - மாநகராட்சி மன்ற தேர்தல்-2024 நாடளுமன்ற தேர்தல் ஆகிய 3 தேர்தல்களிலும் அப்பகுதி மக்கள் தி.மு.க விற்கே வாக்களித்து மாபெரும் வெற்றியை தந்து அ.தி.மு.கவை புறந்தள்ளி விட்டனர்.

அ.தி.மு.க பெற்று வரும் இந்த தொடர் தோல்விகளை மக்களிடம் இருந்து மறைக்கவே தாம்பரம் மாநகராட்சி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவில்லை புளுகு மூட்டைகளை அள்ளி வீசி, மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடித்து - கபட நாடகம் நடத்துகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழ் நாட்டு மக்கள் தெளிவாக உள்ளனர். தினம் தோறும் இந்த ஆட்சி மீது அடுக்கடுக்கான பொய்களை சுமத்தினாலும் மக்கள் ஒரு போதும் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் மனம் மகிழ்ந்து பாராட்டுகின்ற வகையில், மக்கள் போற்றும் மகத்தான ஆட்சியை நடத்திட வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தான் மக்கள் தொடர்ந்து ஆதரவு தருவார்கள்” என தெரிவித்துள்ளார்.

Also Read: இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது தமிழ்நாடு! : முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சியால் தமிழ்நாடு அரசு பெருமிதம்!