Tamilnadu

ஒரே நாளில் ரூ.224.26 கோடி வருவாய் : பதிவுத்துறை வரலாற்றில் புதிய சாதனை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பொறுப்பேற்றதை அடுத்து பதிவுத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதலமைச்சரின் உத்தரவுப்படி பதிவுத்துறையில் பல்வேறு மாற்றங்களை அமைச்சர் மூர்த்தி கொண்டு வருகிறார்.

இந்நிலையில், 12-7-2024 அன்று 20,310 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு , பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ.224.26 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

ஆவணங்களைப்   பதிவு செய்ய முன்பதிவு வில்லைகள் பதிவுத்துறை இணையதளம் மூலம் முன்பதிவு செய்யவேண்டும். முன்பதிவு செய்ய ஒரு சார்பதிவாளருக்கு தினந்தோறும்  100 முன் ஆவணப்பதிவு வில்லைகள் மட்டுமே பதிவுத்துறை இணையதளத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், 12-7-2024 அன்று ஆனி மாதம் கடைசி முகூர்த்த நாள் என்பதாலும் ஆடி மாதம் பிறக்க இருப்பதாலும் பொதுமக்கல் எந்த சிரமமும் இல்லாமல் ஆவணப் பதிவை மேற்கொள்ளவும் முன்பதிவு வில்லைகள் கிடைக்கவில்லை என சிரமப்படக்கூடாது என்பதற்காக ஏற்கனேவே நடைமுறையில் இருந்த ஆவணப்பதிவிற்க்கான 100 வில்லைகள் சிறப்பு நிகழ்வாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 150 ஆக உயர்த்தப்பட்டது.

அதன்படி பொதுமக்கள் உயர்த்தப்பட்ட முன் ஆவணப்பதிவு வில்லைகளை பயன்படுத்தி 12-7-2024  அன்று 20,310 ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டு உரிய சார்பதிவாளர்களால் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் உயர்த்தப்பட்ட ஆவண முன்பதிவு வில்லைகளைப் பயன்படுத்தி 12-7-2024 அன்று 20,310 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு , பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ.224.26 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

Also Read: “2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்த வெற்றி எதிரொலிக்கும்” - அமைச்சர் பொன்முடி!