Tamilnadu

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த TNPSC குரூப் 1 தேர்வு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) முதன்மை தேர்வுகளில் ஒன்றான குரூப் 1 தேர்வின் வழி, நடப்பாண்டில் 90 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

அதன்படி, துணை ஆட்சியர் 16, துணை காவல் கண்காணிப்பாளர் 23, வணிகவரிகள் உதவி ஆணையர் 14. கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் 21, ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் 14, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலர் தலா 1 என மொத்தம் 90 காலியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கை கடந்த மார்ச் 28-இல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இன்று (13.07.24) தமிழ்நாடு முழுவதும் 797 தேர்வு மையங்களிலும், சென்னையில் 124 தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெற்றது.

இத்தேர்வை 1,25,726 ஆண்கள், 1,12,501 பெண்கள், 20 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2.38 இலட்சம் பேர் எழுதினர். சென்னையில் மட்டும் சுமார் 38.8 ஆயிரம் பேர் எழுதினர்.

தேர்வு நடைபெற்ற அனைத்து இடங்களிலும் தேர்வு எழுதுபவர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : வெற்றியை நோக்கி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா... பாமக வேட்பாளர் பின்னடைவு !