Tamilnadu

” 24 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுக்காமல் ஏமாற்றிய அதிமுக” : அமைச்சர் ஐ.பெரியசாமி சொல்வது என்ன?

ஊரகப்பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை இன்று தேனி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, "கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறையில் எந்தவித திட்டங்களும் நிறைவறப்படவில்லை. பசுமை வீடுகள் திட்டத்தில் கூட 24 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படவில்லை. ஆனால் தி.மு.க அரசு வந்த பிறகு கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்திற்காக 3,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு 1 லட்சம் வீடுகள் கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர சேதமடைந்த பழைய வீடுகளை புதுப்பிக்கவும் பயனாளி ஒருவருக்கு 1 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை நிதி வழங்கப்படுகிறது. இதற்காக 8000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இரண்டரை லட்சம் வீடுகள் சீரமைக்கப்பட உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

Also Read: ”முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தை அடுத்து தமிழ்நாட்டில் IT துறை வளர்ச்சியடையும்” : அமைச்சர் PTR!