Tamilnadu

நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வு எப்போது? எப்படி நடைபெறும்? - முழு விவரம் !

நடப்பாண்டில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு வரும் ஜூலை 22-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 7.5% சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22, 23-ம் தேதிகளிலும், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 29-ம் தேதி முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரையும் ஆன்லைனில் நடைபெறவுள்ளது.

இதன் விவரம் பின்வருமாறு :

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர் பிரிவில் விண்ணப்பித்த அரசுப்பள்ளி மாணவர்களுக்குக லந்தாய்வு - ஜூலை 22 முதல் 23

அரசுப்பள்ளி மாணவர்கள் தவிர்த்த சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு - ஜூலை 25 முதல் 27

பொதுப்பிரிவு கலந்தாய்வு - ஜூலை 29 முதல் செப்-3 வரை.

துணை கலந்தாய்வு - செப்.6 முதல் 8 வரை

SC (A) மாணவர்களுக்கான கலந்தாய்வு- செப்.10 முதல் செப்.11 வரை

கலந்தாய்வு முடியும் நாள் - செப்.11

பொதுப்பிரிவில் 3 சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறும்.

=> முதல் சுற்று :

கட்-ஆஃப் மதிப்பெண் 200 முதல் 179 வரை உள்ள 26,654 மாணவர்கள் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

விருப்பக் கல்லூரியை தேர்வு செய்தல்- ஜூலை 29-31

தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை- ஆக.1

தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை உறுதி செய்தல்- ஆக.1- ஆக.2

இறுதி ஒதுக்கீட்டு ஆணை- ஆக.3

கல்லூரியில் சேர வேண்டிய நாள்- ஆக.7

=> இரண்டாம் சுற்று :

கட்-ஆஃப் 178.975 முதல் 142.00 வரை 77,947 மாணவர்கள் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

விருப்பக் கல்லூரியை தேர்வு செய்தல்- ஜூலை ஆக.10-12

தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை- ஆக.13

தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை உறுதி செய்தல்- ஆக.13-14

இறுதி ஒதுக்கீட்டு ஆணை- ஆக.15

கல்லூரியில் சேர வேண்டிய நாள்- ஆக.20

=> மூன்றாம் சுற்று :

கட்-ஆஃப் 141.955 முதல் 77.50 வரை 92,999 மாணவர்கள் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

விருப்பக் கல்லூரியை தேர்வு செய்தல்- ஜூலை ஆக.23-25

தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை- ஆக.26

தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை உறுதி செய்தல்- ஆக.26-27

இறுதி ஒதுக்கீட்டு ஆணை- ஆக.28

கல்லூரியில் சேர வேண்டிய நாள்- செப்.1

Also Read: நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் - தமிழ்நாடு அரசுக்கு மக்கள் நன்றி !