Tamilnadu
சிதம்பரம் நடராஜர் கோவில் : சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் - உயர்நீதிமன்றம்!
தமிழ்நாட்டில் பிரபல கோயில்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு வருகின்றனர். இங்கு அமைந்திருக்கும் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட்டு வந்த நிலையில், திடீரென அதற்கு கோவில் தீட்சிதர்கள் கடந்த ஆண்டு அனுமதி மறுத்தனர்.
ஆனி திருமஞ்சன விழா நடைபெறுவதால் கனகசபை மீது ஏறி 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்யக்கூடாது என தீட்சிதர்கள் அறிவிப்பு பலகை வைத்த நிலையில் அதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே பக்தர்கள் அனைவரும் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஆணை வெளியிட்டிருந்த நிலையில், அதையும் தீட்சிதர்கள் ஏற்காமல் இருந்தனர்.
எனினும் தமிழ்நாடு அரசு தீட்சிதர்கள் வைத்த அறிவிப்பு பலகையை அகற்றி பக்தர்களை கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதித்தது. இந்த நிலையில், கனகசபைல் ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்கும் அரசாணைக்கு எந்த தடையும் விதிக்கப்படாத நிலையில், சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு எதிராக அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிதம்பரம், நடராஜர் கோவிலில், நாளை முதல் மூன்று நாட்கள் ஆனி திருமஞ்சன விழா நடைபெற உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியின் போது பக்தர்கள், கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கும் அரசாணைக்கு எந்த தடையும் விதிக்கப்படாததால், விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் எனவும், சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு எதிராக அறநிலையத் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Also Read
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!