Tamilnadu
”3 மாதத்தில் ரூ.3,727 கோடி கூடுதல் வருவாய்” : அமைச்சர் மூர்த்தி தகவல்!
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, அவர்கள் தலைமையில் இன்று சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரிவளாகக் கூட்டரங்கில் 2024-ஆம் ஆண்டு ஜுன்மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் நலவாரியத்தின் சார்பில் மறைந்த வணிகரின் குடும்பத்தினரான சென்னை மணலியை சேர்ந்த சி. உமா மகேஸ்வரி அவர்களுக்கு குடும்பநல நிதி உதவித் தொகையாக ரூ.3,00,000/- (ரூபாய் மூன்றுலட்சம்) காசோலையை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள். வணிகவரித் துறையில் 2024-2025 ஆம் நிதி ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ( ஏப்ரல் , மே & ஜூன்) கடந்த நிதி ஆண்டை விட ரூ.3727 கோடி கூடுதலாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின் படி கடந்த 02.07.2024 அன்று வணிகவரித்துறை நுண்ணறிவுப்பிரிவின் கூடுதல்ஆணையர் மற்றும் அலுவலர்கள் மேற்கொண்டசிறப்பு சோதனையில் ரூ.1040 கோடி போலி உள்ளீட்டு வரியினை கண்டுபிடித்து போலியான பில்வழங்கிய 316 பதிவுச்சான்றுகள்ரத்துசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
பணித்திறனாய்வு கூட்டத்தில் வழங்கப்படும் அறிவுரைகளை சம்பந்தப்பட்ட இணை ஆணையர்கள் தங்கள் கீழுள்ள துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் மாநில வரிஅலுவலர்களிடம் கலந்தாலேசித்து வரி வருவாய்அதிகப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தங்கள் கோட்டத்திற்குட்பட்டநிலுவையில் உள்ள இனங்களை ஆராய்ந்துவிரைந்து முடிக்கவும், மேற்கண்ட பணிகளைசெயல்படுத்த தேவைப்படும் பணியாளர்கள் மற்றும்வசதிகளை அரசுக்கு தெரியப்படுத்தலாம் எனவும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.
மேலும் தரவுகளின் உண்மை தன்மையினை கண்டறிய அதிநவீன மென்பொருள்கள் விரைவில்துறையில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்கள்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!