Tamilnadu
”இந்தியை நாம் எதிர்க்க இதுதான் காரணம்” : உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் அதிரடி!
ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க சட்டத்துறை சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தி.மு.க பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தொடக்கிவைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன், "ஒன்றிய அரசு 3 சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விழா நடத்தியுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்று நாக்கில் தர்ப்பைப் புல்லை தேய்தாலும் இந்த வார்த்தைகள் வாயில் வராது. இந்த இழவு வேண்டாம் என்பதற்காகத் தான் ஆதியிலிருந்து இந்தியை நாம் எதிர்க்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவைர் ப.சிதம்பரம், "பிரிட்டிஷ் காலனிய சட்டங்களை தூக்கி எறிவதாக சொல்லித்தான் இச்சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். உண்மையில் காலனிய சட்டங்களை இயற்றிய மெக்காலேவுக்கு சர் ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜேம்ஸ் ஸ்டீஃபன்ஸுக்கும் இவர்கள் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். 90 முதல் 95 சதவிகிதம் வரை அந்தச் சட்டங்களிலிருந்து copy அடித்து இதில் ஒட்டி வைத்திருக்கிறார்கள்.” என தெரிவித்துள்ளார்.
பின்னர் பேசிய CPM மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் தொடங்கும் போராட்டங்கள் முதலில் பெரிய தாக்கதை ஏற்படுத்தது போல்தான் இருக்கும், ஆனால், பிறகு இந்தியாவிற்கே வழிகாட்டுகின்ற போராட்டக் களமாக மாறும். அந்தவகையில் தமிழ்நாட்டில் தொடங்கிய நீட் போராட்டம் இன்று நாடு முழுவதும் வெடித்துள்ளது. அதேபோல் 3 சட்டங்களை எதிர்த்து இன்று திமுக தொடங்கிய போராட்டம், நாளை இந்தியாவிலுள்ள எட்டு திக்கிலும் ஒலிக்க போகிறது” என கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!