Tamilnadu
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விற்ற 5 பேர் குண்டர் சட்டத்தில் அதிரடி கைது !
கள்ளக்குறிச்சி மாவட்டம், தகரை கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி (35) மற்றும் சங்கராபுரம் வட்டம் விரியூர் கிராமத்தைச் சேர்ந்த இருதயராஜ் (39) ஆகிய இருவரும் விஷச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த சூழலில் இவர் விஷச்சாராயம் விற்பனை செய்யும்போது சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் காவல் துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடமிருந்து 285 லிட்டர் விஷச்சாராயம் கைப்பற்றப்பட்டது.
அதேபோல் கடந்த மே 30-ம் தேதி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே பாண்டிச்சேரியை சேர்ந்த அண்ணாதுரை (46), சக்திவேல் (42), குமார் (எ) சொட்டைகுமார் (55) ஆகிய 3 பேரும் பாண்டிச்சேரியில் இருந்து சட்டவிரோதமாக போலியாக தமிழ்நாடு அரசு முத்திரையுடன் மதுபானத்தை தயாரித்து விற்பனை செய்ய கடத்தி வந்தனர்.
அப்போது உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினரால் கையும் களவுமாக கைது செய்யபட்டு, விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கபட்டனர். மேற்கண்ட குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட விஷச்சாராயம் விற்பனை செய்யும் குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் மீது கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் நிலையத்தில் விஷச்சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவர்கள் தொடர்ந்து இதுபோன்று மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவர்கள் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதியின் பரிந்துரையின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், மேற்படி ஐந்து நபர்களையும் ஓராண்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி ஐந்து குற்றவாளிகளும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் விஷச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக தற்போதுள்ள 1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தை திருத்தம் செய்து, புதிய மசோதா அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்திருத்ததின்படி, மதுவிலக்கு தொடர்பான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?