Tamilnadu

அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு : சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு என்ன?

சென்னை மாநகராட்சி முழுவதும் 392 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பணிபுரியும் 3100 மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் தினகூலியை ரூ. 300 இல் இருந்து ரூ.325ஆக உயர்த்தி வழங்க சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் மேயர் பிரியா தீர்மானம் நிறைவேற்றினார்.

இந்நிலையில் தற்போது ஊழியர்களுக்கு விடுவிக்கப்படவுள்ள ஜூன் மாத ஊதியத்தை புதிதாக உயர்த்தப்பட்ட ஊதியமாக வழங்க வேண்டும் என அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான ஊதியத்தின் அரியர்ஸ் விடுவிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ 3.07 கோடி கூடுதல் செலவாகிறது. ஊதிய உயர்வு கோரிக்கை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு அம்மா உணவக ஊழியர்களுக்கு தினக்கூலியை உயர்த்தி வழங்கப்படுகிறது. சமீபத்தில், அம்மா உணவக உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ரூ.100 கோடி நில மோசடி : அதிமுக முன்னாள் அமைச்சர் MR விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்கு !