Tamilnadu

49 சிறை அதிகாரிகளுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று(2.7.2024) தலைமைச் செயலகத்தில், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்குதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 5 சிறை அலுவலர்கள் மற்றும் 44உதவி சிறை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையானது, நீதிமன்றங்கள்குற்றவாளிகளுக்கு வழங்கும் தண்டனைகளை நிறைவேற்றுவது மட்டுமின்றி,அவர்களை நல்வழிப்படுத்தி அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான கல்விமற்றும் தொழில் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது.

சிறைகள் மற்றும் சிறைவாசிகளின் பாதுகாப்பினை மேம்படுத்துதல், சிறைவாசிகளின் நலன் மற்றும் சிறைவாசிகளை பொறுப்புள்ள நபர்களாக மாற்றி சமுதாயத்தில்மீண்டும் இணைத்தல் ஆகிய மூன்றும் இத்துறையின் முக்கிய நோக்கங்களாகும்.

2023-2024ஆம் ஆண்டில் சிறைவாசிகளின் நலனுக்கான நிபுணர் குழுவின்அறிக்கையின் அடிப்படையில், சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு முறைமற்றும் உணவின் அளவு ரூ.26 கோடி கூடுதல் செலவில் சரிவிகித சத்துள்ள உணவாகமாற்றம் செய்து வழங்கப்பட்டு வருவதுடன், உணவு தயாரித்திட தேவையானகிரைண்டர், உலர் மாவரைக்கும் இயந்திரம், சிறைவாசிகளுக்கு உரிய நேரத்தில்உணவு விநியோகம் செய்திட இ-ஆட்டோ ஆகியன ரூ.1.23 கோடி செலவில்வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 600 சிசிடிவி கேமராக்கள் ரூ.11.50 கோடி செலவில் நிறுவிட உத்தரவிடப்பட்டு, சிறை பாதுகாப்பினை மேற்படுத்த நேரியல் அல்லாத சந்திப்பு கண்டுபிடிப்பான் (NLJD), ஊடுகதிர் அலகிடும் கருவி (X-Ray Baggage Scanner) போன்ற நவீன உபகரணங்கள் ரூ.5.98 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ளன.

சிறைவாசிகள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன்பேச மாதம் 10 தொலைபேசி அழைப்புகள் செய்திடவும் (ஆடியோ மற்றும் வீடியோ), சிறைவாசிகள் தயாரிக்கும் பொருட்களை காவல்துறை அங்காடியில் விற்பனைசெய்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட சிறை நூலகங்களை மேம்படுத்திட ரூ.2.09 கோடி வழங்கப்பட்டுள்ளது.

சிறை அலுவலர் என்பவர் சிறையின் முதன்மை செயல் அலுவலர் ஆவார்.இவரது முக்கியப் பணி சிறைவாசிகளிடையேயும், பணியாளர்களிடையேயும்ஒழுக்கத்தைப் பேணுவதாகும். உதவி சிறை அலுவலரின் முக்கியப்பணி மத்திய சிறைகளில் சிறைவாசிகளை அனுமதி எடுத்தல், ஆடை, உடமை போன்றவற்றை பராமரித்தல் ஆகும். கிளைச்சிறைகளை பொறுத்தவரை கண்காணிப்பாளராக செயல்படுவர்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிறை அலுவலர் மற்றும் உதவி சிறை அலுவலர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம்தெரிவு செய்யப்பட்ட சிறை அலுவலர்கள் 5 நபர்களுக்கும், உதவி சிறை அலுவலர்கள் 4 பெண்கள் உட்பட 44 நபர்களுக்கும் இன்றையதினம் மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தற்போது பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள சிறை அலுவலர் / உதவி சிறை அலுவலர்களுக்கு வேலூரில் அமைந்துள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பயிற்சியகத்தில் 9 மாத கால அடிப்படை பயிற்சி அளிக்கப்படும்.

Also Read: அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு : சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு என்ன?