Tamilnadu
பல்வேறு முறைகேடு.. எதிர்ப்புக்கு மத்தியில் பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு செய்த ஆளுநர் !
சேலத்தில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன் மீது மோசடி புகார் எழுந்தது. அதாவது பதிவாளர் தங்கவேல் மற்றும் பேராசிரியர்கள் தொடங்கிய தனியார் நிறுவனமான பூட்டர் பவுண்டேஷன் மற்றும் பூட்டர் பார்க் (PUTER Park) நிறுவனங்கள் மூலம் பயிற்சி கல்வி பாடத்திட்டம் வழங்குவது தொடர்பாக பல தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அதன் மூலம் மோசடி மற்றும் முறைகேட்டில் ஈடுபடுவதாக அவர் மீது புகார் எழுந்தது.
அதன்பேரில், பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி கருப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதைத்தொடர்ந்து அவரது பதவி காலம் ஜூன் 30-ம் தேதியோடு (நாளை) நிறைவடையவுள்ள நிலையில், அதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
பல்கலை-யின் சங்கங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதினர். எனினும் ஆளுநர் ரவி, முறைகேட்டில் ஈடுபட்ட ஜெகநாதனுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இதனால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க ஆளுநர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்த சூழலில் கடந்த 24-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது விசிக உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அவர் மீது குற்றச்சாட்டுள்ளது என அந்த குழுவே ஒப்புக்கொண்டுள்ளதாக கூறினார்.
மேலும், உயர்கல்வித்துறை சார்பாக நீதிமன்றத்தில் நாடி உள்ளதாக கூறிய அவர், அவர் பதவிக்காலம் முடியும் தருவாயில் உள்ளதால், அதற்கு முன்பாகவே அவர் மீது வழக்கு இருக்கும் போதே தமிழ்நாடு ஆளுநர் சேலம் பல்கலைக்கழகத்திற்கு சென்று அந்த துணைவேந்தருடன் உரையாடியதாகவும், இதனை கவனத்தில் கொண்டு அவர் மீண்டும் துணைவேந்தராக நியமிக்கப்படாமல் இருப்பதை தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், தற்போது அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். முறைகேட்டில் ஈடுபட்ட ஜெகநாதனின் பணி நீட்டிப்புக்கு பலர் மத்தியிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், நாளையுடன் (ஜூன் 30) பதவி காலம் முடிவடைவதை முன்னிட்டு ஜெகநாதனுக்கு வரும் 2025 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இதற்கு தற்போது கண்டனங்கள் வலுத்து வருகிறது.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!