Tamilnadu
MSME நிறுவனங்களுக்கு ரூ. 2,100 கோடி கடன்! : அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்ட 14 முக்கிய அறிவிப்புகள்!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், துறைவாரியான அமைச்சர்கள், தங்களது மானிய கோரிக்கைகளை வெளியிட்டு வரும் நிலையில், இன்றைய நாள் (28.06.24), அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை, மானியக் கோரிக்கை வழி வெளியிட்டார்.
அவ்வறிவிப்புகள் பின்வருமாறு,
1. விண்வெளி தொழில் கொள்கை (Space Tech Policy) வெளியிடப்படும்!
தமிழ்நாட்டை விண்வெளி தொழிலில் முன்னணி மாநிலமாக மேம்படுத்தவும், அதிகளவிலான முதலீடுகளை ஈர்க்கவும் நடவடிக்கை.
2. சலுகைகளுடன் கூடிய சிறப்பு திட்டம்!
பொம்மைகள், பொழுதுபோக்கு மற்றும் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கு சலுகைகளுடன் கூடிய ஒரு சிறப்பு திட்டம் வெளியிடப்படும்.
3. முதலீட்டு ஊக்குவிப்பு அமைவு (Japan Desk)!
டோக்கியோவில் வழிகாட்டி நிறுவனம் மூலம் ஒரு முதலீட்டு ஊக்குவிப்பு அமைவு (Japan Desk) அமைக்கப்பட்டு, ஜப்பான் நாட்டிடம் இருந்து அதிகளவில் முதலீடுகள் ஈர்க்கப்படும்.
4. புதிய சிப்காட் தொழிற் பூங்காக்கள்!
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.
5. திருச்சியில் மேலும் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா!
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூரில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் மேலும் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
6. திருவாரூர் மாவட்டத்தில் 150 ஏக்கரில் இரு சிப்காட் தொழிற் பூங்காங்கள்!
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மற்றும் கூத்தாநல்லூரில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற் பூங்காக்கள் உருவாக்கப்படும்.
7. கோயம்புத்தூரில் வழிகாட்டி நிறுவனத்தின் கிளை அலுவலகம்!
தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு சேவைகள் வழங்குவதற்கும், முதலீடுகளை மேலும் ஈர்ப்பதற்கும், கோயம்புத்தூரில் வழிகாட்டி நிறுவனத்தின் கிளை அலுவலகம் தொடங்கப்படும்.
8. புதிய மினி டைடல் பூங்காக்கள்!
கரூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் புதிய மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்.
9. தொழிற்பூங்காக்களை சிப்காட் உருவாக்கும்!
தனியார் பங்களிப்புடன் கூட்டு முயற்சியில் (Joint Venture) தொழிற்பூங்காக்களை சிப்காட் உருவாக்கும்.
10. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2,100 கோடி கடன்!
1,150-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையிலும், 8,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2,100 கோடி கடன் வழங்கப்படும்.
11. 25 கோடியில் M-Sand உற்பத்தி ஆலை!
ரூ.25 கோடியில் M-Sand உற்பத்தி ஆலை, ஆலங்குளம் சிமெண்ட் ஆலையில் அமைக்கப்படும்.
12. ரூ.6 கோடியில் விளையாட்டுத் திடல்கள்!
தொழிலாளர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வலிமைப்படுத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.6 கோடியில் விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்படும்.
13. தயாரிப்பு பொருட்கள் காட்சி மையம் அமைக்கப்படும்!
தொழிற்சாலைகளின் தயாரிப்பு பொருட்களை, ஒருசேர காட்சிப்படுத்த ஏதுவாக, இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில், ரூ.5 கோடியில் தனித்துவம் வாய்ந்த ஒரு தயாரிப்பு பொருட்கள் காட்சி மையம்.
14. சுற்றுலா தலங்களின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்!
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, ஒரு புதிய மைல்கல்லை நோக்கி கொண்டு செல்ல, சுற்றுலா தலங்களின் உள்கட்டமைப்பு தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!