Tamilnadu

ஒன்றிய அரசால் ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு : பேரவையில் விளக்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று நிதித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரையாற்றினார்.

அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ”சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு எந்த நிதியும் ஒதுக்கப்படாததால் ரூ.12 ஆயிரம் கோடியை தமிழ்நாடு அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிதியை ஒன்றிய அரசு வழங்கி இருந்தால் இருந்தால் 25 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கி இருக்கலாம். 30 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கிராமங்களில் சாலைகளை அமைத்து இருக்கலாம்.மூன்று லட்சம் வீடுகள், 50 ஆயிரம் வகுப்பறைகள் கட்டி இருக்கலாம். ஆனால் எந்த திட்டத்தையும் செய்ய முடியாத அளவிற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதேபோல் மாநில அரசு ஒன்றிய அரசு இணைந்து செயல்படுத்தும் திட்டத்திற்கான பங்களிப்பை ஒன்றிய அரசு குறைத்து வருகிறது.பிரதம மந்திரி நகர்புற வீடு கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒன்றரை லட்சம் பங்களிப்பாக வழங்கிய நிலையில், தமிழ்நாடு அரசு 12 லட்சம் ரூபாயில் இருந்து 14 லட்சம் ரூபாய் பங்களிப்பாக வழங்குகிறது.

GST வருவாய் இழப்பை வரிவிகிதப்படி வசூலித்து இழப்பீடு சரிசெய்யப்படும் என்றார்கள். ஆனால் 2022 ஆம் ஆண்டு அதை ஒன்றிய அரசு நிறுத்தியதால் தமிழகத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் முன்னேறுகிறது என்றால் சூத்திரதாரி யார் என்பதை நாம் உணர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: 2500 சிறுபான்மையின மகளிருக்கு தையல் இயந்திரங்கள் : அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வெளியிட்ட அறிவிப்புகள்!