Tamilnadu

500 மின்சார பேருந்துகள் : அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் இதோ!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சிவசங்கர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:-

1.மாதாந்திர பயணச்சீட்டு திட்டம் அனைத்து நகரப் பேருந்துகளிலும் விரிவாக்கம் செய்யப்படும்.

2.100 பேருந்து பணிமனைகளில் பணிபுரியும் பணியாளர்களின் ஒப்பனை அறைகள் ரூ.10 கோடியில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

3.ரூ.10 கோடி செலவில் 100 பணிமனைகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.

4.அரசு பேருந்துகளில் சிப்பம் மற்றும் சரக்கு அனுப்புதல் (Logistics) சேவை அறிமுகம் செய்யப்படும்.

5.சென்னையில் இரண்டாம் கட்டமாக 500 மின்சார பேருந்துகள்.

6.ரூ.8.77 கோடி செலவில் 8771 பேருந்துகளுக்கு பாதுகாப்பு அரண்கள் பொருத்தப்படும்.

7.ரூ.15.54 கோடி செலவில் 3886 பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்படும்.

8. 8 பணிமனைகளில் ரூ.8.4 கோடியில் அதிநவீன உபகரணங்கள் அமைக்கப்படும்.

9. மதுரை, கோவை, வேலூர், காஞ்சிபுரம், கடலூரில் உள்ள அரசு பணிமனைகள் நவீன மயமாக்கப்படும்.

10.புதிய சாலைப் பாதுகாப்புக் கொள்கை மற்றும் செயல்திட்டம் வெளியிடப்படும்.

Also Read: அமுதசுரபி திட்டம் விரிவாக்கம் : பழங்குடியினர் வாழ்வில் ஒளி ஏற்றும் அரசு - புதிய அறிவிப்புகள் என்ன?