Tamilnadu

அமுதசுரபி திட்டம் விரிவாக்கம் : பழங்குடியினர் வாழ்வில் ஒளி ஏற்றும் அரசு - புதிய அறிவிப்புகள் என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கயல்விழி செல்வராஜ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:-

1.ரூ.3 கோடி ஒதுக்கீட்டில் பழங்குடியினர் வாழ்வாதார மேம்படுத்தப்படும்.

2.ரூ.50 கோடி மதிப்பீட்டில் தொழிற்பேட்டை அலகுகள் புனரமைக்கப்படும்.

3.ரூ. 70 கோடி ஒதுக்கீட்டில் பழங்குடியினருக்கு 4500 வீடுகள் கட்டித்தரப்படும்.

4.ரூ. 100 கோடி ஒதுக்கீட்டில் பழங்குடியினர் குடியிருப்புகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

5.பழங்குடியினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ரூ.50 கோடியில் அணுகுசாலை வசதி ஏற்படுத்தித் தரப்படும்.

6.ரூ. 9 கோடியில் அமுதசுரபி திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு தரமான உணவுகள் வழங்கப்படும்.

7. ரூ.13 கோடியில் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் நவீன வசதிகளுடன் மறுசீரமைப்பு செய்யப்படும்.

8. உயர்கல்வியில் அதிக மதிப்பெண் பெறும் பழங்குடியின மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உயர் திறன் ஊக்கத் திட்டம் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

9.விவசாயத் தொழிலாளர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை நில உடைமையாளர்களாக உயர்த்தி சமூக நீதியை நிலை நாட்ட ரூ. 20 கோடி ஒதுக்கீட்டில் நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

10. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் பழைமைப் பண்பாடு, காப்பியம், மொழி வழி தேசப்பற்றைக் காட்சிப்படுத்தும் வகையில் வாழ்வியல் விழா நடத்தப்படும்.

11.ரூ.3 கோடியில் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்திற்கான நெறிமுறைகள் வெளியிடப்படும்.

12.ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

Also Read: பேரவையில் 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் மெய்யநாதன் : என்ன அறிவிப்புகள் அது?