Tamilnadu
ரூ.234 லட்சத்தில் பால் ஆய்வுக் கூடங்கள் : அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்ட அசத்தல் அறிவிப்புகள் இதோ!
தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த ஜூன் 20 ஆம் தேதி தொடங்கி மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இதில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-
1. 2024-25 ஆம் ஆண்டில் புதிதாக பதிவு செய்யப்படும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு SS பால்கேன்கள், பால் அளவை உபகரணங்கள், பதிவேடுகள் மற்றும் பால் பரிசோதனை கருவிகள் ஆகியவை வழங்கப்படும்.
2. பசுந்தீவன பற்றாக்குறையை கருத்தில் கொண்டு பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.100 இலட்சம் செலவில் பசுந்தீவன புல் கரணைகள் வழங்கப்படும்.
3. பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நலநிதித் திட்டத்தின் கீழ் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு மற்றும் இதர நிதியுதவிகள் உயர்த்தி வழங்கப்படும்.
4. பால் உற்பத்தியாளர்களின் கால் நடைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து டானிக் (Nutraceuticals) பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படும்.
5. களப் பணியாளர்களான கால்நடை மருத்துவர்கள், விரிவாக்க அலுவலர்கள், கிராம நல ஊழியர்கள் போன்ற 3000 பணியாளர்களுக்கு பாரம்பரிய கால்நடை மூலிகை மருத்துவ பயிற்சிகள் வழங்கப்படும்.
6. தரமான பால் கொள்முதல் மற்றும் பால் உற்பத்தியை உறுதி செய்யும் நோக்கில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் கரூர் ஒன்றியங்களில் ரூ.234 இலட்சம் மதிப்பீட்டில் ஆய்வுக்கூடங்கள் தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்தின் (NPDD) மூலம் நிறுவப்படும்.
7. 3 ஒன்றிய மற்றும் அனைத்து இணைய பால்பண்ணைகளின் ஆய்வுக்கூடங்கள் ரூ.931.50 இலட்சம் மதிப்பீட்டில் தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்தின் (NPDD) மூலம் மேம்படுத்தப்படும்.
8. கிராம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், ஒன்றிய மற்றும் இணைய ஊழியர்களுக்கு ரூ.95 இலட்சம் செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்தின் (NPDD) மூலம் வழங்கப்படும்.
9. புதுக்கோட்டை, கோயம்புத்தூர், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், தஞ்சாவூர், திண்டுக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஒன்றியங்கள் மற்றும் சங்கங்களின் செயல்பாடுகளை கணினிமயமாக்குதல் (ERP & AMCS) பணிகள் ரூ.14.20 கோடி மதிப்பீட்டில் தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்தின் (NPDD) மூலம் செயல்படுத்தப்படும்.
10.150 தொகுப்பு பால் குளிரூட்டும் மையங்களில் முதற்கட்டமாக ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் பால் பகுப்பாய்வு (கலப்படம்) கருவிகள் தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (NPDD)நிறுவப்படும்.
11. பால் கொள்முதல், பாலின் தரம் மற்றும் பால் விநியோகம் ஆகியவற்றிற்கு உடனடி ஒப்புகைச் சீட்டு வழங்குவதற்கு ஏதுவாக 500 தொகுப்பு பால் குளிரூட்டும் மையங்களில் மென்பொருள் நிறுவப்பட்டு பால் கொள்முதல் செயல்பாடுகள் Cloud Based Connectivity மூலம் கண்காணிக்கப்படும்.
12. பால் உற்பத்தியாளர்கள் குறித்த விபரங்கள், அவர்களின் கறவை மாடுகள் குறித்த விபரங்கள், பால் உற்பத்தி மற்றும் பால் உற்பத்தியாளர்கள் பயிரிடும் பசுந்தீவனத்தின் அளவு ஆகிய தரவுகளை ஆன்ட்ராய்டு செயலி மூலம் சேகரிக்கப்படும்.
13. புதிதாக பால் பண்ணை தொழில் துவங்க விரும்பும் தொழில் முனைவோருக்காக இரண்டு பால் பண்ணை தொழில் வளர்ச்சி மையம் அமைத்தல்.
14. மாவட்ட ஒன்றியங்களுக்கு சொந்தமான காலி நிலத்தில் இயந்திரமயமாக்கபட்ட நவீன விவசாய முறைகளை பயன்படுத்தி மாதிரி கால்நடை பண்ணை நிறுவுதல்.
15. மாவட்ட ஒன்றிய மற்றும் சென்னை மாநகர பால்பண்ணைகளுக்கு ISO 22000 சான்றிதழ் பெறப்படும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!