Tamilnadu
நீர்வளத்துறை மானியக் கோரிக்கை : 11 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் துரைமுருகன்!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாளான நேற்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை தொடங்கியது. பின்னர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
இதில் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது சில முக்கிய அறிபிப்புகளை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:-
1. முக்கிய ஆறுகளில் வெள்ளக் காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், வெள்ளநீரின் திவிரத்தை கட்டுப்படுத்தவும் 7 மாவட்டங்களில் 10 இடங்களில் தடுப்பணைகள் அமைக்கும் பணி ரூ.71 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
2. செங்கல்பட்டு, புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, தென்காசி, தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் 10 இடங்களில் அணைக்கட்டுகள் மற்றும் பகிரணைகள் அமைக்கும் பணி ரூ.55 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
3. கடலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 3 இடங்களில் தரைகீழ் தடுப்பணைகள் அமைக்கும் பணி ரூ.103 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
4.சிவகங்கை மாவட்டத்தில் முன்னாள் ஜமீன் கண்மாய்களான 7 குறு பாசன கண்மாய்களைப் புனரமைக்கும் பணி ரூ.4 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
5.பாரம்பரிய நீர்பாசன கட்டுமானங்களான ஈரோடு மாவட்டத்தில் உள்ள காலிங்கராயன் அணைக்கட்டு மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழவூர் அணைக்கட்டுகளைப் புனரமைப்பு செய்யும் பணி ரூ.3 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
6.பாசன நிலங்களுக்கு நீர் வழங்குவதை உறுதி செய்யவும், நீர் வீணாவதை தடுக்கவும், நான்கு மண்டலங்களிலுள்ள 11 மாவட்டங்களில் உள்ள பழுதடைந்துள்ள 24 அணைக்கட்டு மற்றும் தடுப்பணைகளில் உள்ள புனரமைப்பு, மறுசீரமைப்பு மற்றும் மறு கட்டுமானப் பணிகள் ரூ.284 கோடி 70 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
7.பாசன நிலங்களுக்கு நீர் வழங்குவதை உறுதி செய்யவும், நீர் வீணாவதை தடுக்கவும், நான்கு மண்டலங்களிலுள்ள 13 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 25 கால்வாய்கள், வழங்கு வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் போன்ற பாசன அமைப்புகளில் புனரமைப்பு, மறு சீரமைப்பு மற்றும் கட்டுமானம் செய்யும் பணிகள் ரூ.116 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
8.பாசன நிலங்களுக்கு நீர் வழங்குவதை உறுதி செய்யவும், நீர் வீணாவதை தடுக்கவும், நான்கு மண்டலங்களிலுள்ள 9 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 15 ஏரிகள் மற்றும் அதன் கட்டுமானங்கள் புனரமைப்பு மற்றம் மறுசீரமைப்பு பணிகள் ரூ.69 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
9. திருவாரூர், கரூர்,திருப்பூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 6 நீரொழுங்கின புனரமைப்பு, மறுசீரமைப்பு மற்றும் மறு கட்டமானம் செய்யும் பணிகள் ரூ.23 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
10. வேலூர், கடலூர்,திருவள்ளூர், சேலம், அரியலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பழுதடைந்துள்ள தரைப்பாலம், பாதுகாப்பு சுவர், கசிவுநீர் குழாய்களில் அடைப்பு நீக்குதல் மற்றும் இதர கட்டுமானங்கள் புனரமைப்பு பணிகள் 11 எண்கள், ரூ.42 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
11.நவீன நில அளவை கருவிகளை DGPS கொண்ட எல்லைக் கற்கள் நடும் பணி ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!