Tamilnadu

”2025 ஆம் ஆண்டிற்குள் குழந்தை தொழிலாளர் முறை நிச்சயம் ஒழிக்கப்படும்” : அமைச்சர் சி.வி.கணேசன் உறுதி!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாளான நேற்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை தொடங்கியது. பின்னர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் பதிலளித்து உரையாற்றினார்.

அப்போது பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், " குழந்தை தொழிலாளர் முறையினை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமலாக்க அலுவலர்களால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 65 குழந்தை தொழிலாளர்களும், 274 வளரிளம் பருவத் தொழிலாளர்களும், 196 கொத்தடிமைத் தொழிலாளர்களும் மீட்கப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2025 ஆம் ஆண்டிற்குள் குழந்தை தொழிலாளர் முறை தமிழ்நாட்டில் அகற்றப்படும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: திருநங்கை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ. 1 லட்சம் மானியம் : பேரவையில் அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு!