Tamilnadu
ஒன்றிய அரசு மீண்டும் ஓரவஞ்சனை: தமிழ்நாட்டிற்கு ரூ.5 ஆயிரம் கோடி - உ.பி-க்கு ரூ.25 ஆயிரம் கோடியா?
ஜி.எஸ்.டி. அமல்படுத்திய பிறகு மாநிலங்களுக்கான வரி வருவாய் பறிபோனது. இதனால் 5 ஆண்டுகளுக்கு வரி இழப்பீட்டை ஒன்றிய அரசு வழங்கி வந்தது. இதேபோன்று, மாநிலங்களுக்கு உரிமையாக வரவேண்டிய வரிபகிர்வை உடனடியாக ஒன்றிய அரசு வழங்காமல் தாமதம் செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக 2024 - 25 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு வரிபகிர்வாக 12 லட்சத்து 19 ஆயிரத்து 783 கோடி ரூபாய் வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜூன் மாதத்துக்கான வரிப்பகிர்வாக ஒரு லட்சத்து 39 ஆயிரம் கோடி ரூபாய் வரிப்பகிர்வை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. அதிக அளவாக பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்துக்கு 25 ஆயிரத்து 69 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான பீகாருக்கு 14 ஆயிரத்து 56 கோடியும், மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.10 ஆயிரத்து 970 கோடியும், மகாராஷ்ட்ராவுக்கு ரூ.8 ஆயிரத்து 828 கோடியும் நிதி பகிர்வு வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
ஆந்திராவுக்கு ரூ.5,655 கோடியும், அருணாசல பிரதேசத்துக்கு ரூ.2,455 கோடியும், அசாமுக்கு ரூ.4,371 கோடியும் நிதி பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அதிக அளவில் வரி வருவாயை ஒன்றிய அரசுக்கு வழங்கி வரும் தமிழ்நாட்டுக்கு வெறும் 5 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வரி வருவாய்யில் பா.ஜ.க.ஆளும் மாநிலங்களின் கண்களுக்கு வெண்ணையும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் கண்களுக்கு சுண்ணாம்பையும் வைக்கும் ஒன்றிய அரசுக்கு அரசியல் விமர்சகர்களும், நடுநிலையாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!