Tamilnadu

”221 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்றுள்ளது தி.மு.க கூட்டணி” : The Hindu கட்டுரை!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 40க்கு40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று வரலாற்று சாதனையை தி.மு.க தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணி பெற்றுள்ளது. இந்தியாவிலேயே பா.ஜ.க. காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

இந்நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 221 சட்டமன்ற தொகுதிவாரியாக தி.மு.க. கூட்டணி அதிக வாக்குகள் பெற்றுள்ளதை விவரித்து The Hindu நாளிதழ் சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது.

அதில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தொகுதிவாரியாக பதிவான வாக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 221 சட்டமன்ற தொகுதிகளில் மற்ற கட்சிகளை காட்டிலும் தி.மு.க. கூட்டணிக்கே அதிக வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருவள்ளுர், தென்சென்னை, அரக்கோணம், பெரம்பலூர், கரூர், திருச்சி, கோவை, நாமக்கல், நீலகிரி, மதுரை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 32 மக்களவை தொகுதிகளில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் அக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் பெரும்பாலான சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுகவின் வாக்கு சதவீதம் குறைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள இக்கட்டுரை, சென்னையில், ராயபுரம், ஆர்.கே.நகர் உள்ளிட்ட தொகுதிகளில் 30 சதவீதம் வரை இருந்த அதிமுகவின் வாக்குகள் தற்போது 22 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Also Read: ”ஜனநாயகத்தை காப்பாற்றி நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது” : தமிழச்சி தங்கபாண்டியன் MP பதிலடி!