Tamilnadu

20 தொகுதிகளில் தி.மு.க முன்னிலை : முழு விவரம் இதோ!

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்துதுவதற்காக 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ’இந்தியா’ கூட்டணியை உருவாக்கி தேர்தளில் களம் கண்டுள்ளனர். இதுவரை இப்படி எதிர்க்கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது கிடையாது. இதனால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதியோடு நிறைவடைந்த தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி 40 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்நிலையில் தி.மு.க கூட்டணி தமிழ்நாட்டில் 38 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.

மேலும் கூட்டணியில் தி.மு.க 21 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்நிலையில் வாக்கு எண்ணிககை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 20 தொகுதிகளிலும் தி.மு.க முன்னிலை பெற்று வருகிறது.

தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலை விவரம் :

1. வட சென்னை - கலாநிதி வீராசாமி

2. மத்திய சென்னை - தயாநிதி மாறன்

3. தென்னை சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்

4. ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு

5. காஞ்சிபுரம் (தனி) - செல்வம்

6. ஆரணி - தரணிவேந்தன்

7. அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்

8. வேலூர் - கதிர் ஆனந்த்

9. திருவண்ணாமலை - அண்ணாதுரை

10. பெரம்பலூர் - அருண் நேரு

11. கோவை - கணபதி ராஜ்குமார்

12. பொள்ளாச்சி - ஈஸ்வரசாமி

13. ஈரோடு - கே இ பிரகாஷ்

14. நீலகிரி (தனி) - ஆ.ராசா

15. சேலம் - செல்வகணபதி

16. கள்ளக்குறிச்சி - மலையரசன்

17. தஞ்சாவூர் - எஸ் முரசொலி

18. தூத்துக்குடி - கனிமொழி

19. தென்காசி (தனி) டாக்டர் ராணி ஸ்ரீ குமார்

20. தேனி - தங்கம் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

Also Read: #ElectionResultsUpdates : தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி 38 இடங்களில் முன்னிலை!