Tamilnadu
“கலைஞர் சந்திக்க விரும்பிய தலைவர் யார் என்பது தெரியுமா?” : கலைஞர் சொன்ன சுவாரஸ்ய தகவல்!
தமிழ்நாட்டின் தனிப்பெருந்தலைவராக மட்டுமின்றி, இந்தியத் திருநாடே வியந்து போற்றிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், அதுமட்டுமின்றி, ஊடகவியலாளர்கள் சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் கலைஞர் பற்றிய நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர். மேலும் அவர் செய்த சாதனைகளையும் பட்டியலிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது, செய்தியாளர் சந்திப்பில் கலைஞர் பேசிய நகைச்சுவையான பதிலகளை பலரும் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர். அந்தவகையில், பில் கேட்ஸ், தலைவர் கலைஞரை சந்தித்த தருனம் பற்றியும் பலரும் நினைவுக்கூர்ந்து உள்ளனர். ஒருமுறை பத்திரிக்கையாளர் சந்திப்பில், பில்கேட்ஸைச் சந்தித்தபோது என்ன பேசினீர்கள் என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து பேசிய கலைஞர், “பில்கேட்ஸ் என்னிடம் கொஞ்சம் கடன் வாங்குவதற்காக வந்திருந்தார்” என்று போகிறபோக்கில் கூறிவிட்டுச் சென்றார்.
அதேபோல், மற்றொரு பத்திரிக்கையாளர் சந்திப்பில், உலக தலைவர்களில் நீங்க சந்திக்கவிரும்பும் தலைவர் யார் என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு கலைஞர் அளித்த பதில் இதோ..
கேள்வி : ‘‘பிரதமர் முதல் பில்கேட்ஸ் வரை உங்களைச் சந்தித்துவிட்டுப் போகிறார்கள். நீங்கள் சந்திக்க விரும்பி, இன்னும் சந்திக்க முடியாத நபர் என யாராவது உண்டா?’’
கலைஞர் பதில் ‘‘ஒரே ஒருவர் உண்டு. அமெரிக்காவுக்கு சவால்விட்டுச் செயல்படும் தலைவர், இப்போதுகூட ஒரு தவறான பிரசாரத்தினால் அவர் சீரியஸாக இருக்கிறார்னு சொன்னாங்களே,
அவர்தான்!’’ ( ‘‘யார் ஒசாமா பின் லேடனா?’’ என்று நிருபர் கேட்க, பெரிதாகச் சிரிக்கிறார் )
“நீங்க வேற ஒரு துருவத்துக்குப் போயிட்டீங்க. நான் சொல்ல வந்தது ஃபிடல் காஸ்ட்ரோ!’’ என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!