Tamilnadu

"அனைவரின் கைகளில் தவழ வேண்டிய நூல்" - கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலரை குறிப்பிட்டு முதலமைச்சர் நெகிழ்ச்சி !

தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5 முறை இருந்தவரும், நவீன தமிழ்நாடை உருவாக்கிஅதன் சிற்பியாக விளங்கியவருமான முத்தமிழறிஞர் கலைஞரின் 101 ஆவது பிறந்த நாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு சென்னை மெரினாவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் 3 தொகுப்புகள் கொண்ட கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்டார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், " முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருவாழ்வையும் தொண்டையும் சொல்லும் “தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் 2024” என்ற நூலை உருவாக்கியுள்ளது. இந்தப் புத்தகம் உங்கள் கைகளில் தவழ வேண்டும்! அதிலுள்ள கருத்துகள் நெஞ்சில் நிலைக்க வேண்டும்!

தொட்ட துறைகளில் எல்லாம் துலங்கிய தலைவர் கலைஞரின் பெருவாழ்வைப் போற்றும் வகையில், தமிழ்நாட்டின் பல்துறை ஆளுமைகளின் பங்களிப்புடன் கலைஞர் நூற்றாண்டு நினைவு மலரினை மூன்று தொகுதிகளாகத் தயாரித்துள்ளது செய்தி மக்கள் தொடர்புத் துறை.

இம்மலரை வெளியிட்டு, செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைத்துள்ள ‘கலைஞர் நூற்றாண்டு நிறைவு நினைவலைகள்’ புகைப்படக் கண்காட்சியையும் பார்வையிட்டுத் தமிழினத் தலைவரின் நினைவுகளில் மூழ்கினேன்" என்று கூறியுள்ளார்.

Also Read: பாஜகவுக்கு 50 இடங்களை குறைத்த Zee News கருத்து கணிப்பு : இரண்டே நாளில் மாறிய முடிவு... பின்னணி என்ன ?