Tamilnadu

"தேர்தல் ஆணையம் கும்பகர்ணனை போல தூங்கக்கூடாது" - செல்வப்பெருந்தகை !

மக்களவைத் தேர்தலில் இறுதி மற்றும் 7 ஆம்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது பேசிய அவர்", "தேர்தல் ஆணையம் தபால் வாக்குகளை முதலிலேயே எண்ண வேண்டும். அதனை கடைசியாக எண்ண கூடாது. தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகள் வெளியிடும் போது கும்பகர்ணனை போல தூங்கக்கூடாது.

குமரியில் இன்று நிறைவு தியானத்தில் ஈடுபட்டுள்ள மோடி , யாருடைய நனாலனுக்காக தியானம் செய்கிறார் 14 கேமராக்களோடு தியானம் செய்வது ஏன்? இன்று மோடியின் தொகுதியான வாரணாசியில் தேர்தல் நடக்கும் நேரத்தில் பிரதமர் தியானத்தின் மூலம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தேர்தல் முகவர்கள் வாக்கு எண்ணும்போது காங்கிரஸ் தொண்டர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.வாக்குச்சாவடியில் உள்ள முகவர்கள், இத்தனை நாள் உழைத்ததை விட வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4 அன்று கடுமையாக உழைக்க வேண்டும்.

தேர்தல் அலுவலர்கள் அறிவிக்கும் வாக்கு சதவீதமும் வாக்கு பெட்டியில் உள்ள வாக்குகளின் சதவீதமும் சரியானதாக இருக்கிறதா என்பதை முகவர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்"என்று கூறினார்.

Also Read: தண்ணீரில் வீசப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் : மேற்கு வங்கத்தில் தொடரும் மோதல் !