Tamilnadu

இந்த 3 நாட்கள் ஊட்டிக்கு செல்ல வேண்டாம் : சுற்றுலா பயணிகளுக்கான முக்கிய தகவல் இதோ!

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக வெயில் தாக்கம் அதிகரித்திருந்தது. பல மாட்டங்களில் 100 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வெப்பம் தனிந்ததால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. அங்காங்கே கனமழை, மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு மே 18,19,20 ஆகிய மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த மூன்று நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் நீலகிரி வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Also Read: சூரிய காந்தப் புயல்களின் தரவுகளை சேகரித்த ஆதித்யா விண்கலம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியது என்ன ?