Tamilnadu

மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி : தமிழ்நாடு சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல் என்ன?

ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. மஞ்சள் காய்ச்சல் பரவலை தடுக்க இந்தியாவில் இருந்து சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு வந்து செல்பவர்களுக்கு மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பத்து நாட்களுக்குப் பிறகு மேற்கண்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அல்லது இந்தியா வருவதற்கு அனுமதிக்கும் வண்ணம் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் சான்றிதழ் மூலம கண்காணிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மஞ்சள் காய்ச்சல் விவரங்கள் மற்றும் தடுப்பூசி மையங்கள் குறித்தான விவரங்கள் இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என ஒன்றிய சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளது

தமிழ்நாட்டில் ஒன்றிய சுகாதார அமைச்சகம் அங்கீகரித்துள்ள மூன்று மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் தடுப்பூசி மையங்களில் வெளிநாடு செல்பவர்கள் கடவுச்சீட்டு மற்றும் தங்களது விவரங்கள் அடங்கிய தொகுப்பு மருத்துவ விவரங்கள் ஆகியவற்றை அளித்து தடுப்பூசி பெற்றுக் கொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது

அதன்படி சென்னை கிண்டி கிங் நோய்த்தடுப்பு ஆராய்ச்சி நிறுவனம் , சென்னை துறைமுகம் சுகாதார நிறுவனம், தூத்துக்குடி துறைமுக சுகாதார மையம் ஆகியவற்றில் ரூ.300 கட்டணமாக செலுத்தி சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வர்கள் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது .

Also Read: சென்னையில் பேருந்து, மெட்ரோ, மின்சார ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் : ஜூனில் அமலுக்கு வரும் திட்டம் ?