Tamilnadu
தொடரும் மோசடி - ”நீட் தேர்வை ரத்து செய்வதுதான் ஒரே தீர்வு” : தி.மு.க MP பி.வில்சன் வலியுறுத்தல்!
மாணவர்கள் தங்கள் மருத்துவ கனவை தொடர்வதற்கும் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கும் நீட் தேர்வை ரத்து செய்வதுதான் ஒரே தீர்வு என தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பி.வில்சன் எம்.பி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவு வருமாறு:-
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கடந்த 5 ஆம் தேதி 571 நகரங்களில் 4 ஆயிரத்து 751 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வில் 24 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். நீட் தேர்வுக்கு முந்தைய நாள் நீட் வினாத்தாள் வெளியான சம்பவத்தில் பீகாரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் நீட் தேர்வு குறித்த கவலை மாணவர்களிடையே எழுந்துள்ளது.
ஆனால் நீட் வினாத்தாள் மோசடியில் கைது செய்யப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை. நீட் தேர்வில் நிலவும் சமத்துவமின்மை, சமூகப் பாகுபாடு போன்ற காரணங்களால், 26-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்யும் வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தாக்கல் செய்யப்பட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பபேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டும், குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு இன்னும் அனுப்பப்படவில்லை.
இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிராக மிகப்பெரிய பிரச்சாரத்தை ஆரம்பித்து 85 லட்சத்திற்கும் அதிகமான கையெழுத்துகளை பெற்றுள்ளார். மாணவர்கள் தங்கள் மருத்துவ கனவை தொடர்வதற்கும் மற்றும் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கும் நீட் தேர்வை ரத்து செய்வதுதான் ஒரே தீர்வு” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!