Tamilnadu
தேர்தல் பணம் பிரிப்பதில் பஞ்சாயத்து : பாஜக பிரமுகரை தாக்கிய விவகாரம் - சிக்கிய மாவட்ட பாஜக தலைவர் !
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் மது என்ற மதுசூதனன். இவர் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய தலைவர் பொறுப்பில் இருந்தவர். இந்த சூழலில் இவர் வழக்கம்போல் நேற்றைய முன்தினம் (மே 8) இரவு தனது வீட்டில் இருக்கும்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் மதுசூதனனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மதுசூதனன் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து இதுகுறித்து பாதிக்கப்பட்ட மதுசூதனனின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.
அதாவது மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் மற்றும் மதுசூதனன் இடையே இது தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. இதனால் மதுசூதனன் பாஜக குறித்து சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த பிரச்னை காரணமாக பாஸ்கர் உத்தரவின்பேரில், பாஜக பொதுச்செயலாளர் செந்திலரசன் என்பவர் கூலிப்படையை ஏவி, மதுசூதனனை வெட்டியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து பாஜக தலைவர் பாஸ்கர், பொதுச்செயலாளர் செந்திலரசன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட பாஜக மாவட்ட விளையாட்டு பிரிவு தலைவர் ஜெகதீசன் மற்றும் அவரது கூட்டாளி சரவணன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்ததாவது, "உள்கட்சி பிரச்னையால் கொலை வெறி தாக்குதல் நடைபெற்ற சம்பவத்தில் 24 மணி நேரத்திற்குள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொலைவெறி தாக்குதலுக்கு முழுமுதற் காரணமாக இருந்தது திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் மற்றும் திருவாரூர் மாவட்ட பாஜக செயலாளர் செந்தில் அரசன் ஆகியோர் என தெரியவந்துள்ளது.
மேலும் இவருடன் எட்டு பேர் கொண்ட கும்பல் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது. இவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளனர். தலைமறைவாகியுள்ளவர்களை கண்டுபிடிப்பதற்காக நான்கு தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகிறோம். கூடிய விரைவில் அனைவரையும் கைது செய்வோம்" என்று தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!