Tamilnadu
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - 91.55% தேர்ச்சி : இம்முறையும் அசத்திய மாணவிகள்!
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வு மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்களில் 12,616 பள்ளிகளில் நடைபெற்றது. 9.10 லட்சம் மாணவர்களும், 28,827 தனி தேர்வர்களும், 235 சிறை கைதிகளும் என மொத்தம் 9.38 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.
இந்நிலையில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர் (91.55% ) தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாணவிகள் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 (94.53%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் மாணவர்கள் 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 பேர் (88.58%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 5.96% மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். அதோடு மாணவர்கள் பள்ளியில் அளித்த உறுதிமொழி படிவத்தில் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் குருஞ்செய்தியாக அனுப்பட்டுள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!