Tamilnadu

நீட் தேர்வெழுத வந்தவர்களுக்கு குடிநீர் வழங்காத தேர்வு மையம்: களத்தில் உதவிய போலீஸார் - குவியும் பாராட்டு!

இன்று நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வானது நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக சென்னை வே ப்பேரியில் அமைந்துள்ள அகர்வால் வித்யாலயா பள்ளியில் நீட் தேர்வானது மதியம் 2 மணி அளவில் தொடங்கியது.

முன்னதாக இந்த தேர்வுக்கு பல்வேறு பகுதியிலிருந்து வருகை புரிந்துள்ள மாணவ மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையத்திற்கு முன் நின்றிருந்துள்ளனர்.ஆனால், அவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கூட தேர்வு மையம் சார்பில் செய்து கொடுக்காமல் இருந்துள்ளனர்.

வணிகர் தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் அங்கிருந்த போக்குவரத்துக்கு காவலர்களிடம் இது குறித்து முறையிட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நிலைமையை உணர்ந்த அங்கிருந்த போக்குவரத்துக்கு போலீஸார், வெயிலில் சிரமப்பட்டு இருந்த பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு குடிநீர் மற்றும் மோர் குளிர்பாட்டில்கள் ஏற்பாடு செய்து வழங்கினார். மனித நேயமிக்க காவலர்கள் செய்த இந்த செயலுக்கு பலதரப்பட்ட மக்களிடம் இருந்து தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக உள்ளது.

Also Read: தொடரும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டம் : ஹரியானாவில் மேலும் ஒரு பெண் விவசாயி உயிரிழப்பு !