Tamilnadu

ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் கே.ஜி.எஃப் விக்கி கைது : போலிஸ் அதிரடி!

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் என். என். கார்டன் பகுதியில் கே.ஜி.எப் என்ற பெயரில் மூன்று துணிக்கடைகளை நடத்தி வருகிறார். அவர் பா.ஜ.க பிரமுகரும் கூட.

இந்நிலையில் அவரது கடையில் ரிஸ்வான் என்ற 19 வயது இளைஞர் வேலைபார்த்து வந்துள்ளார். பிறகு அவர் கடந்த மாதம் 17 ஆம் தேதி வேலையிலிருந்து நின்றுள்ளார்.

பிறகு ரிஸ்வானை கடைக்கு வரவைத்து, இரும்பு ராடல் கொடூரமாக தாக்கியுள்ளார். மேலும் ரூ. 30 லட்சத்தை திருடியதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் என்று பெற்றோருக்கு போன் செய்து, மிரட்டி அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரத்தைப் பெற்றுக் கொண்டு ரிஸ்வானை விக்னேஷ் அனுப்பியுள்ளார் .

பின்னர் பலத்த காயமடைந்த ரிஸ்வானை உறவினர்கள் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீசார் தாக்கிய சசிகுமார் என்ற கருப்பன் மற்றும் சச்சின் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் முக்கிய குற்றவாளியான விக்னேஷ் தலைமறைவானார். அவரை பிடிக்கத் தனிப்படையினர் தேடி வந்த நிலையில் அவர் சமூக வலைதளங்களில் ஏற்றிய வீடியோவில் கோயம்புத்தூரில் இருப்பதாக தகவல் கிடைத்தது அதன் பெயரில் போலீசார் கோயம்புத்தூர் சென்று விக்கியை கைது செய்து சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Also Read: பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு : youtuber சவுக்கு சங்கர் கைது!