Tamilnadu

அதீத வெப்ப அலை வீசும் : தமிழ்நாட்டுக்கு இன்று மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம் !

இந்தியாவில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மதியநேரத்தில் தேவையின்றி வெளியேசெல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தில் நாட்டிலேயே மூன்றாவது அதிகபட்ச வெப்ப நிலை அளவு பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதோடு தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்றைய தினம் வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதேபோல் உள் கர்நாடகா, தெலுங்கானா, ராயலசீமா, உத்திர பிரதேஷ், கடலோர ஆந்திரா மற்றும் யானம், மேற்கு வங்கம், சிக்கிம், ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை வெப்ப அலை வீச கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மேற்கு வங்கம் மற்றும் கடலோர ஒடிசாவின் ஒரு சில பகுதிகளில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிகக் கடுமையான வெப்ப அலை வீச கூடும் என்றும் எச்சரித்துள்ளது. இன்றும் நாளையும் மிகக் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மேற்குவங்க மாநிலத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கையும், ஒடிசாவிற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Also Read: இஸ்லாமியர் பற்றி தான் பேசியது பொய்யென தெரிந்த மோடி அந்தர் பல்டி அடித்துவிட்டார்- அம்பலப்படுத்திய முரசொலி