Tamilnadu

தமிழ்நாடு, புதுச்சேரியில் நிறைவடைந்த மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு!

தமிழ்நாட்டின் 39 தொகுதிகள், புதுச்சேரியின் 1 தொகுதி என இந்தியா முழுக்க 102 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவை முதற்கட்ட தேர்தல் (19.01.24) மாலை 6 மணிக்கு நிறைவுற்றது.

தமிழ்நாடு, புதுச்சேரியை பொருத்தமட்டில் அரசியல் கட்சி தலைவர்களை கடந்து, மூத்த பத்திரிகையாளர் ‘தி இந்து’ என். ராம் உள்ளிட்ட பல அரசியல் விமர்சகர்களின் ஆதரவு தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியை சார்ந்திருக்க, மக்களும் இந்தியா கூட்டணிக்கு சார்பான கருத்துகளை தேர்தல் நாளன்று தெரிவித்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தேர்தல் வாக்களிப்பு நேரம் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்த நிலையில், 6 மணியை கடந்தும் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு, தனியாக டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது.

அதன் படி, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மாலை 7 மணி நிலவரப்படி, 72.09% வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.67% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 67.35% வாக்குப்பதிவும் பதிவானது.

மக்களவை தேர்தலோடு இணைந்து, தமிழ்நாட்டின் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றது.

Also Read: மணிப்பூரில் தொடரும் கலவரம்: துப்பாக்கி சூடு,மத்திய பாதுகாப்பு படையினர் முன் சூறையாடப்பட்ட வாக்குச்சாவடி!