Tamilnadu

மோடியும், போலியும்.. உண்மையை புட்டுபுட்டு வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ்!

பா.ஜ.கவின் 10 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடியும், அக்கட்சி தலைவர்களும் மூட்டை மூட்டையாக வாயால் வடை சுட்டுவந்துள்ளனர். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு, அனைவரின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் என பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்த கூட்டம்தான் பா.ஜ.க.

தற்போது இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தங்களது பொய் மூட்டைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறார் பிரதமர் மோடி. இந்நிலையில் மோடியின் போலி பிம்பத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் சமூகவலைதளத்தில் மோடியும், போலியும் என்ற தலைப்பில் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.

மோடியும், போலியும் !!!

- மோடியை ட்விட்டரில் பின்தொடரும் 9.7 கோடி பேரில், 60% [5.8 கோடி கணக்குகள்] போலி!

- வேலைவாய்ப்பு இல்லாமல் 1 லட்சம் இளைஞர்கள் தற்கொலை - ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்று சொன்னது போலி!

- சாமானிய மக்களின் வங்கிக்கணக்கில் இருந்து 35000 கோடி அபேஸ் - அனைவரின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் என்றது போலி!

- இந்தியாவின் 96 லட்சம் ஏக்கர் நிலம் சீனா கைவசம் - மோடியின் தேசப்பற்று நாடகம் போலி!

- 1 லட்சம் விவசாயிகள் தற்கொலை - விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என்றது போலி!

- பணமதிப்பிழப்பிறகு பின் 99.3% பணம் வங்கிக்கு திரும்பியது - கருப்பு பணத்தை ஒழிக்க பணமதிப்பிழப்பு நாடகம் போலி!

- 2019-2023 வரை 35,680 MSME தொழில்கள் மூடப்பட்டன - மேக் இன் இந்தியா கூச்சல் போலி!

- தேர்தலுக்காக பெட்ரோல் விலை 2 ரூபாய் குறைப்பு - பெட்ரோல் விலையை நிறுவனங்களே தீர்மானிக்கின்றன என்றது போலி!

- CAG அறிக்கையில் பாஜக அரசு 7.5 லட்சம் கோடி ஊழல் - மோடியின் ஊழல் ஒழிப்பு கோஷம் போலி!

- பல ஆயிரம் கோடி ஊழல் செய்த 25 அரசியல்வதிகள் பாஜகவில் - இந்தியா ஊழலில் இருந்து விடுதலை பெற்று விட்டது என்ற மோடியின் வசனம் போலி!

உண்மை:

இப்படி பல உண்மைகள், பாஜகவின் போலிச்செய்தி போராளிகளால் புதைக்கப்படுகின்றன. உலக நாடுகள் வரிசையில் போலி செய்திகள் பரப்புவதில் இந்தியா முதலிடம்!

Also Read: "எனக்கு குழந்தை மாதிரி" - இளம்பெண்ணுக்கு முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர் புதிய விளக்கம் !