Tamilnadu

சென்னையைத் தொடர்ந்து வேலூரிலும்... பிரதமர் மோடியை புறக்கணிக்கும் தமிழ்நாட்டு மக்கள்!

மழை வெள்ளப்பாதிப்பின் போது தமிழ்நாட்டிற்கு வராத பிரதமர் மோடி, தேர்தல் என்றவுடன் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு விசிட் செய்து, தமிழ் பாச நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டிற்கு உருப்படியான எந்த வித திட்டங்களையும் முன்னெடுக்காததோடு, உரிய நிதியையும் வழங்காமல் பாஜக வஞ்சித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்நிலையில், பாஜகவின் தேர்தல் கூட்டங்களிலும், மோடியின் தேர்தல் பரப்புரைகளிலும் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, சென்னையில் நேற்று நடைபெற்ற பிரதமர் மோடியின் "Roadshow" அமைந்தது. எதிர்பார்த்த அளவுக்கு கூட்டமின்றி மோடியின் "Roadshow" பிசுபிசுத்தது.

இந்த நிலையில் வேலூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது, அவரது இந்தி பேச்சைக் கேட்க விரும்பாத மக்கள், கூட்டம் கூட்டமாக வெளியேறினர். இதனால், பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே காட்சியளித்தன. இருப்பினும், காலி இருக்கைகளைப் பார்த்தபடியே பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தார். இதன் மூலும் பா.ஜ.கவை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிப்பது தெளிவாக தெரிகிறது.

Also Read: “இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காக என்றும் முன்னிற்கிறது திராவிட மாடல் அரசு” - முதல்வர் ரமலான் வாழ்த்து!