Tamilnadu

"தமிழ்நாட்டின் வரிப்பணத்தை சுருட்டியவர் பிரதமர் மோடி" : அமைச்சர் எ.வ.வேலு தாக்கு!

திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் மேட்டு சக்கரகுப்பம் பகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் எ.வ.வேலு, " இந்த தேர்தல் யார் வரக்கூடாது என்பதற்கான தேர்தல். பாசிசத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல் இது. சமூக நீதிக்கும், மனுநீதிக்கும் இடையே நடைபெறும் தேர்தல்.

அ.தி.மு.க வீணாப்போன கட்சி. இபிஎஸ், ஓபிஎஸ், டி.டி.தினகரன் ஆகியோர் தனித்தனியாகக் கடைகளைப் போட்டுக்கொண்டு எங்களுக்கு ஓட்டுப்போடுங்கள் என்று கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். பாசிச பா.ஜ.கவுடன் சேர்ந்து கொண்டு 10 ஆண்டுகள் தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்தவர்கள்தான் இந்த அ.தி.மு.கவினர்.

பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது GSTயை அமல்படுத்த விடமாட்டேன் என்று கூறியவர்தான் இன்று நாடு முழுவதும் GSTயை கொண்டு வந்து சிறு குறு தொழில்களை அழித்துவிட்டார். மீண்டும் பாசிச பா.ஜ.க ஆட்சிக்கு வந்து விட்டால் GST வரி 50% உயர்ந்து விடும். சிலிண்டர் விலை ரூ.2700 ஆக உயர்ந்து விடும். தமிழ்நாட்டின் வரிப்பணத்தை சுருட்டி பீகாருக்கும், உத்திர பிரதேசத்திற்கும் கொடுத்தவர்தான் இந்த மோடி. இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. எனவே இந்த முறை நாம் வெற்றி பெற அனைவரும் சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: மகாராஷ்டிராவை கைப்பற்ற திட்டமிடும் பா.ஜ.க! : குழம்பிப்போன மாநில கட்சிகள்!