Tamilnadu
தேர்தல் என்றால் மட்டும்தான் தமிழ்நாட்டுக்கு மோடி வருவார், ஆனால் நிதி கொடுக்கமாட்டார் - உதயநிதி விமர்சனம்!
இந்தியா கூட்டணி சார்பில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து, திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "கடந்த பத்து வருடத்தில் ஒன்றிய பிரதமர் மோடி அவர்கள் எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார்? வெறும் தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே வரும் அவர், 2014 ல் வந்தார். வந்தவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். வைத்தது ஒரு கல், அந்தக் கல்லையும் நான் எடுத்து வந்து விட்டேன் . இந்த தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் தலைப்பே மாநில உரிமைகளை மீட்கும் தலைவரின் குரல். அதிமுக ஆட்சி செய்த கடந்த 10 ஆண்டுகளில் மாநில உரிமைகளை ஒன்றிய அரசிடம் அடகு வைத்து விட்டார்கள் . ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கை சட்டம் கொண்டு வந்தார்கள். குலக்கல்வி திட்டத்தை கொண்டு வர நினைக்கிறார்கள். இப்போது பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் மாணவன் இந்த திட்டம் வந்தால் எட்டாம் வகுப்பிற்கு மட்டுமல்ல ஐந்தாம் வகுப்பிற்கும் பொது தேர்வு எழுதக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றிய அரசுக்கு வரியாக ஆறரை லட்சம் கோடி கொடுத்துள்ளோம். ஆனால் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வெறும் ஒன்றறை லட்சம் கோடி நமக்கு திருப்பி கொடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய் கொடுத்தால் நமக்கு அவர்கள் திருப்பி கொடுப்பது 28 பைசா மட்டும்தான். இனிமேல் மோடி அவர்களின் பெயர் 28 பைசா பிரதமர் என நீங்கள் கூற வேண்டும். இப்போது கடைசியாக 10 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறார் ஏனென்றால் தேர்தல் வந்துள்ளது. ஒன்றிய பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழ்நாட்டின் மீது உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் புயல் பாதிப்பின் போது வந்திருக்க வேண்டும், வந்தாரா? தமிழ்நாடு அரசின் சார்பில் நிவாரணம் கேட்கப்பட்டது, கொடுத்தாரா? ஒன்றிய நிதி அமைச்சர் நாங்கள் என்னை ஏடிஎம் மிஷின் என்றால் என கேள்வி கேட்டார். நாங்கள் உங்கள் ஏடிஎம் பணத்தை கேட்கவில்லை, தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தை தான் நான் கேட்கிறேன். உங்கள் அப்பன் வீட்டு பணத்தை நாங்கள் கேட்கவில்லை என்று கூறினேன். அதற்கு ஒன்றிய நிதி அமைச்சர் டெல்லியில் பத்திரிக்கையாளர் சந்திப்பை வைத்து எனக்கு பாடம் எடுத்தார். புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் நம் தலைவர் 6000, 1000 என பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்கினார்.
கடந்த ஜெயலலிதா ஆட்சியின் போது நீட் தேர்வை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கவில்லை. அரியலூர் அனிதாவில் ஆரம்பித்து சென்னையில் ஜெகதீசன் வரை 21 குழந்தைகள் இதுவரை தற்கொலை செய்துள்ளனர். அடுத்த நாள் ஜெகதீசனின் தந்தை செல்வ சேகரன் அவரும் தற்கொலை செய்து கொண்டார். ஒரு குடும்பத்தையே இந்த நீட் தேர்வு நாள் இழந்துள்ளோம் . இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் நீட் தேர்வை நிச்சயமாக ரத்து செய்வோம் என தேர்தல் வாக்குறுதியில் கொடுத்துள்ளோம் . சுங்கச்சாவடி முற்றிலும் அகற்றப்படும், கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய் ஆக்கப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளோம், பெட்ரோல் விலை 75 ரூபாயும் டீசல் விலை 65 ரூபாயும் குறைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளோம். இதையெல்லாம் நிச்சயமாக நம் தலைவர் செய்து காட்டுவார். கலைஞர் கூறுவது போல் சொல்வதை தான் செய்வோம் செய்வதை தான் சொல்வோம் என்று தலைவர் உறுதியாக உள்ளார்.
கொரோனா காலத்தில் கோவிட் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ஒரே அரசு தமிழ்நாடு அரசு. கோவையில் கோவிட் பெருந்தொற்று காலத்தில் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை நேரில் சந்தித்த ஒரே முதலமைச்சர் நம் தமிழ்நாடு முதலமைச்சர் தான். சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதியை அனைத்தும் நிறைவேற்றியுள்ளோம்.
சிஏஜி அமைப்பு ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை வெளியிடுவார்கள். ஒன்றிய அரசு செலவு செய்த கணக்கில் ஏழரை லட்சம் கோடி கணக்கில் இல்லாமல் உள்ளதாக தெரிவித்துள்ளது. துவாரகா சாலை திட்டத்தில் ஒரு கிலோமீட்டர் சாலை இடுவதற்கு 250 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். மருத்துவ காப்பீடு திட்டத்தில் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு திட்டம் கொடுத்து உள்ளனர். இதற்கெல்லாம் பாடம் புகட்ட வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி உங்களுடைய வாக்குகளை கை சின்னத்தில் இடவேண்டும். இவர்களுக்கு எல்லாம் பாடம் புகட்ட ஜூன் மூன்றாம் தேதி முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள், ஜூன் நான்காம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாள். அவரின் இந்த 100ம் ஆண்டு நூற்றாண்டு விழாவில் அவருக்கு தேர்தல் வெற்றியை பரிசாக நாம் எல்லோரும் கொடுப்போம்" என்று கூறினார்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!