Tamilnadu

தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : விவரம் என்ன?

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இதனிடையே 10 ஆண்டுகால பாசிச பாஜக அரசை வீழ்த்த, நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர். தமிழ்நாட்டிலும் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 21 தொகுதிகளில் தி.மு.க போட்டியிடுகிறது.

இதனைத் தொடர்ந்து இன்று அண்ணா அறிவாலயத்தில் 21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுற்றுப்பயண விவரம் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் !

22.03.2024 (வெள்ளிக்கிழமை) - திருச்சி,பெரம்பலூர்

23.03.2024 (சனிக்கிழமை) - தஞ்சை,நாகை

25.03.2024 (திங்கட்கிழமை) - கன்னியாகுமரி, திருநெல்வேலி

26.03.2024 (செவ்வாய்கிழமை) - தூத்துக்குடி இராமநாதபுரம்

27.03.2024 (புதன் கிழமை) - தென்காசி விருதுநகர்

29.03.2024 (வெள்ளிக் கிழமை) - தருமபுரி, கிருஷ்ணகிரி

30.03.2024 (சனிக்கிழமை) - சேலம், கள்ளக்குறிச்சி

31.03.2024 (ஞாயிற்றுக் கிழமை) - ஈரோடு நாமக்கல் கரூர்

02.04.2024 (செவ்வாய் கிழமை) - வேலூர், அரக்கோணம்

03.04.2024 (புதன் கிழமை) - திருவண்ணாமலை, ஆரணி

05.04.2024 (வெள்ளிக்கிழமை) - கடலூர், விழுப்புரம்

06.04.2024 (சனிக் கிழமை) - சிதம்பரம்,மயிலாடுதுறை

07.04.2024 (ஞாயிற்றுக்கிழமை) - புதுச்சேரி

09.04.2024 (செவ்வாய் கிழமை) - மதுரை, சிவகங்கை

10.04.2024 (புதன் கிழமை) - தேனி, திண்டுக்கல்

12.04.2024 (வெள்ளிக் கிழமை) - திருப்பூர், நீலகிரி

13.04.2024 (சனிக் கிழமை) - கோவை, பொள்ளாச்சி

15.04.2024 (திங்கட் கிழமை) - திருவள்ளூர் வடசென்னை

16.04.2024 (செவ்வாய் கிழமை) - காஞ்சிபுரம், திருபெரும்புதூர்

17.04.2024 (புதன் கிழமை) - தென்சென்னை, மத்திய சென்னை

Also Read: நாடாளுமன்ற தேர்தல் 2024: கோவை, சேலம் உள்ளிட்ட 8 மேற்கு மாவட்டங்களுக்கான திமுகவின் அசத்தலான வாக்குறுதிகள்!