Tamilnadu
”தொழில் முதலீடுகளின் மையம் தமிழ்நாடு” : அமைச்சர் TRB ராஜா பெருமிதம்!
தமிழ்நாட்டில் டாடா மோட்டார்ஸ் குழுமம் ரூ.9000 கோடி முதலீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, " தமிழ்நாட்டில் டாடா மோட்டார்ஸ் குழுமம் ரூ.9000 கோடி முதலீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் காரணமாக 5 ஆயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு வரலாற்றில் கடந்த 2 மாதங்களில் 2 பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இவ்வளவு குறுகிய காலகட்டத்தில் இதுபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது இல்லை.
வெளிநாடுகளிலிருந்து வரக்கூடிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முதல் தேர்வாகத் தமிழ்நாடு இருக்கிறது. முதலீடு தொடர்பாக நமது முதலமைச்சரை நேரடியாக வந்து சந்திக்கிறார்கள். தொழில்துறையில் தமிழ்நாடு மிகவும் வளர்ச்சி அடைந்த ஒரு மாநிலமாக உள்ளது.
தமிழ்நாட்டில் எவ்வளவு கோடி முதலீடு வருகிறது என்பதைவிட எப்படிப்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது என்பதுதான் முக்கியம். 2021 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கிட்டத்தட்ட 10 லட்சம் கோடிக்கு மேல் தொழில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையில் மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் போது மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் பணி தேர்வும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ராக்கெட் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்களும் முதலீடு செய்ய அதிக அளவில் வாய்ப்புள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!