Tamilnadu
முதலமைச்சர் அறிவித்த 2 நாளில் தொடங்கிய வீடு கட்டும் பணி: நன்றி தெரிவித்த பத்மஸ்ரீ திருமதி சின்னப் பிள்ளை!
முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாயி அவர்களிடம் கடந்த 2000-ஆம் ஆண்டில் “ஸ்த்ரிசக்தி” புரஸ்கார் விருது பெற்றவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பத்மஸ்ரீ திருமதி சின்னப் பிள்ளை. அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் தனக்கு வீடு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவித்து இருந்தார்.
அதனைத் தொடர்ந்து இதனை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பத்மஸ்ரீ திருமதி சின்னப் பிள்ளை அவர்களுக்கு புதியதாக வீடு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிட்டார்.
பின்னர், பத்மஸ்ரீ திருமதி சின்னப் பிள்ளை அவர்களுக்கு ஏற்கெனவே அரசால் வழங்கப்பட்டுள்ள ஒரு செண்ட் வீட்டு மனையுடன் பில்லுச்சேரி ஊராட்சி, திருவிழாப்பட்டி கிராமத்தில் கூடுதலாக 380 சதுர அடி நிலத்திற்கான பட்டா முதலமைச்சர் அறிவித்த ஒரு மணி நேரத்தில் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பத்மஸ்ரீ திருமதி சின்னப் பிள்ளை அவர்களுக்குப் புதிய வீடு வழங்கப்படுகிறது. வீடு கட்டும் பணி இந்த மாதமே தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு நாட்களில் நேற்று வீடு கட்டும் பணி துவக்கி வைவைக்கப்பட்டது.
தொடர்ந்து சின்னப்பிள்ளை அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, நீண்ட காலம் போராடிய நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்த ஒரு மணி நேரத்தில் தன்னிடம் பட்டா வழங்கியதையும் தொடர்ந்து இரு தினங்களில் வீடு கட்டும் பணியை துவக்கியுள்ளதற்கும் முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றி நன்றி என்று தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!